Monday, November 9, 2015

நான் திருநங்கையாகப் பிறந்தது என்னுடைய தவறா‬ ?? மதிப்பிற்குரிய மங்கை பானு

‪#‎நான்_திருநங்கையாக_பிறந்தது_என்_தவறா‬??
அப்பா ,அம்மா,சொந்தம் பந்தம் என்று எதுவுமே இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் எங்களின் நிலையை கண்டால் கல்லும் கண்ணீர் சிந்தும் .நான் இந்தியாவின் முதல் திருநங்கை பொறியியல் கல்லூரி மாணவி இந்த இந்திய அரசாங்கம் என்னை போன்ற மாணவிக்கு அரசு கல்லூரியில் இடம் தராததால் ஊருக்கு ஒதுக்குபுறம் ஒரு தனியார் கல்லூரியில் பயிலுகிறேன்.எனக்கு தங்குவதற்கு வீடு இல்லை வீடு தேடி நாயைவிட கேவலமாக அழைந்த எங்களுக்கு சோர்வும்,கசப்பான அனுபவங்களும்தான் மிச்சம்."நீங்கள் நாயுடுவா???நாங்கள் நாயுடுங்களுக்குதான் வீடு கொடுப்போம்??என்றார் ஒரு வீட்டு முதலாளி.ஒருவர் நான் திருநங்கை என்று கூறிய அடுத்த வினாடி இல்லைமா வீடு இல்லை..என்று கூறி வாசலில் நின்ற வாரே அனுப்பிவிட்டனர்.இன்னும் பலர் நாங்கள் வீடு ரெடி பன்றோம் கூறி ஏமாற்றத்தை பரிசாக கொடுத்தனர். இப்பொழுது தெரிகிறதா நாங்கள் ஏன் அராசாங்கதிடம் வீடு கேட்கிறோம் என்று.சரி வீடு தான் தரமுடியாதுங்கிறாங்க கல்லூரி விடுதியிலாவது தங்க அனுமதியுங்கள் என்று கல்லூரி நிர்வாகத்திடம் அனுகினால்.முடியாது என்று மறுத்து விட்டார்கள்.தங்குவதற்கு இடம் கூட இல்லாமல் இருக்கிறேன் இப்பொழுது அடுத்த வாரம் எனக்கு தேர்வு வேறு இந்த மனநிலையில் இவ்வளவு கஷ்டதின் மத்தியில் நான் படிக்கனும் என்ன செய்வது?இந்த சுதந்த்திர இந்தியாவில் கண்ணியமான ஒரு வாழ்க்கை வாழ துடிக்கும் இந்த குடிமகள் திருநங்கையாக பிறந்தது என் தவறா????

No comments:

Post a Comment