Monday, October 26, 2015

பத்மபாரதியின் ‘திருநங்கையர் சமூகவரைவியல்’ நூலறிமுகம், விமரிசகனின் பரிந்துரை September 11, 2015

இந்தியாவை பல்லினக்குழுக்களின் அருங்காட்சியகம் என்று சொல்வார்கள். மிகச்சிறிய நிலப்பகுதிக்குள்ள்ளேயே முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கைப்பரப்புகள் பண்பாட்டுவெளிகள் காணக்கிடைக்கின்றன. எழுபதுகளில் நாட்டாரியல் முறையாக இங்கே அறிமுகமாகும்வரை அவ்வாழ்க்கைத் தளங்களை இலக்கியம் மட்டுமே அவ்வப்போது எடுத்து முன்வைத்துக் கொண்டிருந்தது. விதிவிலக்காகவே பிலோ இருதயநாத், நா.வானமாமலை போன்றவர்களைச் சொல்லவேண்டும்
நாட்டாரியல் மற்றும் மானுடவியல் ஆய்வுகள் நம் கல்விநிறுவனங்களில் அறிமுகமானபோது அவற்றை ஆராய்வதற்குரிய ஆய்வுமுறைமைகள் உருவாகிவந்தன. ஆய்வுக்குரிய நிதியும் பல்கலைகளால் வழங்கப்பட்டது. ஏராளமான மாணவர்கள் நாட்டாரியலை தங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்கள். ஆனால் நம்முடைய நாட்டாரியல் ஆய்வுகளில் மிகக்கணிசமானவை ஆய்வறிஞர் பட்டத்தை எப்படியேனும் பெறும் நோக்குடன் அவசரக்கோலத்தில் செய்யப்பட்டவை.
நண்பர் நிர்மால்யாவின் நண்பர் ஒருவர் ஊட்டியில் நடைபாதை வணிகர். தோடர்களின் வாழ்க்கையில் ஆர்வமுடையவர். முக்கியமானவராகக் கருதப்படும் ஒரு மானுடவியலாளர் அவரிடம் கடிதமெழுதியே தகவல்களைக் கேட்டு கள ஆய்வுசெய்ததாக அறிவித்து நூல் ஒன்றை எழுதியதைப்பற்றிச் சொல்லி அவருக்கு தான் எழுதிய கடிதங்களையும் பதில்களையும் காட்டி வருந்தினார். கணிசமான ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக செயல்பட்டவரே அந்தப்பேராசிரியர்தான்.
20051108-narikuravar_front
நம் நாட்டாரியலாய்வுகளில் பொருட்படுத்தக்கூடியவையே குறைவு. இன்னமும்கூட நம் சிறிய சாதிகள்,பழங்குடிகள், நாடோடிச்சமூகங்கள், விளிம்புநிலை வாழ்க்கைகள் முறையாக ஆவணப்படுத்தப்படாமலேயே உள்ளன. சொல்லப்போனால் பணி தொடங்கப்படவே இல்லை. விதிவிலக்காகச் சொல்லப்படவேண்டிய முக்கியமான பெயர் கரசூர் பத்மபாரதி. தமிழ்ச்சூழலில் ஒரு பெண்ணுக்கு இருக்கக்கூடிய அனைத்து சமூகத்தடைகளையும் கடந்து துணிச்சலாக விளிம்புநிலை மக்களிடையே சென்று உடன் வாழ்ந்து அவர் பதிவுசெய்த வாழ்க்கைச்சித்திரங்கள் தமிழுக்கு மிகமிக முக்கியமானவை. தன் எல்லைகளை கடும் உழைப்பாலும் ஆர்வத்தாலும் கடந்துசெல்லும் பத்மபாரதி போன்றவர்களே ஒரு சூழலின் முன்னுதாரணங்களாக இருக்கமுடியும்.
பத்மபாரதியின் முதல்நூல் ’நரிக்குறவர் இனவரைவியல்’ அவரது முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டின் நூல்வடிவம். தமிழினி பதிப்பாக வெளிவந்த இது தமிழின் அறிவியக்கத்தில் பரவலான கவனத்தைப்பெற்றது. பொதுவாக முனைவர் பட்டத்திற்காக ஆய்வுசெய்பவர்கள் அதன்பின்னர் ஆய்வில் இறங்குவதில்லை. முதல் ஆய்வுக்களம் அளித்த அனுபவஞானத்துடன் பத்மபாரதி செய்த இரண்டாவது ஆய்வு ’திருநங்கையர் சமூக வரைவியல்’. தமிழ் பண்பாட்டு ஆய்வுக்களத்தில் ஒரு சாதனை என்றே இந்நூலை எந்த ஐயமும் இன்றி சொல்லமுடியும்.
வெறும்செவிவழிச்செய்திகளைக் கொண்டு அடித்தளமக்களின் வாழ்க்கையைப் பற்றிய இலக்கியப்பதிவுகளை உருவாக்குவது ஒரு பொதுப்போக்காக இன்று மாறிவருகிறது. காமம், வன்முறை இரண்டையும் சித்தரிப்பதற்கான ஒரு களம் என்பதற்குமேல் இவ்வெழுத்தாளர்களுக்கு அவ்வுலகம் மீது ஆர்வமில்லை. அவர்களைப்போன்றவர்கள் கவனிக்கவேண்டிய நூல் இது. ஓர் கறாரான ஆய்வுநூல் அவர்கள் உருவாக்கும் சமூகசித்திரங்களை எல்லாம் எத்தனை எளிதாகக் கடந்துசெல்லும் என்பதைக் காணலாம். ஒரு மாய உலகம்போல கவர்வது, விதவிதமான திறப்புகளை அளித்தவ்படி விரிவது இந்நூல்
திருநங்கையர் எனப்படும் மூன்றாம் பாலினத்தவரை வரலாற்றில். மொழியில், பண்பாட்டில், உயிரியலில் வைத்து வரையறைசெய்துகொள்ளும் இனவரலாறு என்னும் முதல் அத்தியாயமே இந்நூலுக்காகச் செய்யப்பட்டுள்ள உழைப்பைச் சுட்டிக்காட்டுவதுஇந்தியா முழுக்க மூன்றாம்பாலினத்தவர் எவ்வகைச் சொற்களால் அழைக்கப்படுகிறார்கள், பண்பாட்டில் அவர்களின் இடம் என்ன, அவர்களைப்பற்றிய இலக்கியப்பதிவுகள் என நீள்கிறது இது.
திருநங்கையர் ஒரு சமூகமாகவே நெடுங்காலமாகச் செயல்பட்டு வந்துள்ளனர். அவர்கள் கோதி அல்லது கோட்டி என்று அழைக்கப்பட்டிருக்கின்றன. அத்தொழிலுக்காக தங்களை திருநங்கையராக ஆக்கிக்கொண்டவர்களும் உண்டு. குஜராத் பகுதிகளில் பாவையா என இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். பஹுசரா என்னும் மாதாவை வணங்குபவர்கல். தென்னிந்தியாவில் ஜோகப்பா என்று இவர்கள் குறிக்கப்படுகிறார்கள். ரேணுகா எல்லம்மா போன்ற தெலுங்குநிலத் தெய்வங்கள் பால்மாறும் வல்லமைகொண்டவை. ஆகவே பெண்ணென தன்னை ஆக்கிக்கொண்ட ஆண் பூசகர்களே அவர்களை வழிபடவேண்டும். அதற்காக உருவான சமூகம் இது. இயல்பான மூன்றாம்பாலினத்தவரும் குறிநீக்கம் செய்துகொண்டவர்களும் அடங்கியது.
thirunangai-samuka-varaiveyal-54882
இத்தகைய தகவல்களின் வழியாக விரியும் ஒரு அகன்ற பகைப்புலத்தில் பத்மபாரதி சமகாலத்து மூன்றாம்பாலினத்தவரின் வாழ்க்கையைப்பற்றிய ஆய்வுக்குள் செல்கிறார். மூன்றாம்பாலினத்தவரை சமகாலத்தில் எப்படியெல்லாம் அழைக்கிறார்கள் என விரிவாகச் சொற்பட்டியலிடுகிறார் பத்மபாரதி. அப்பட்டியலே ஒரு பெரிய பண்பாட்டு ஆவணம். ஆண்மையைப்போற்றும் ஒரு சமூகத்தின் அருவருப்பு கேலி ஆகியவற்றுடன் விசித்திரமானதில் புனிதத்தைக் காணும் மதமனநிலையையும் அதில் கான்ணமுடிகிறது . ஒன்பது, பொன்ஸ், கீரைவடை, கொவம், பொட்டை, பொட்டைமறி, கீரைச்சட்டி, சங்காண், உஸ்ஸ்புஸ் பொப்பிங்கா பிண்டகுமுக்கு தடிமுழுங்கி என நீளும் இச்சொற்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் நிலைப்பட்டுப்போன ஒரு மனநிலை உள்ளது.
மூன்றாம்பாலினத்தவர் தங்களுக்கென புராணங்களையும் வரலாறுகளையும் உருவாக்கிக்கொள்வதன் நுணுக்கமான சித்திரத்தை பத்மபாரதி அளிக்கிறார். சிவனும் மோகினி வடிவில் வந்த விஷ்ணுவும் கூடியபோது பிறந்தவர்களே மூன்றாம்பாலினத்தவர் என ஓரு தொன்மம், புகழ்பெற்ற அரவான் தொன்மம். போத்ராஜ் மகாராஜாவின் வழிவந்தவர்கள் என ஒரு வரலாறு. இவ்வாறு வாசித்துச்செல்லும்போது எழும் கேள்வி ஒன்றுதான். இந்த தொன்மங்களும் வரலாறுகளும் இவர்களுக்கு எதற்காகத் தேவைப்படுகின்றன? இவற்றினூடாக இவர்கள் கட்டி எழுப்புவது எதை? ஓர் சமூக அடையாளத்தையா? கூட்டான ஆளுமையையா?
மூன்றாம்பாலினத்தவர் பற்றிய அரசுக்கணக்கீடுகள் முதல் வெவ்வேறு வகையான புள்ளிவிவரங்களை தொகுத்து இந்திய சமூகக் கட்டுமானத்தில் அவர்களின் இடமென்ன என்று காட்டுகிறார் பத்மபாரதி. மூன்றாம்பாலினத்தவரின் தனிச்சமூக அமைப்பு குறித்த அவரது விவரணை தமிழில் மிக அரிதான ஓர் ஆவணப்படுத்தல். வடநாட்டில் பூனாவாலி, லாலன் வாலி ,புல்லாக்வாலி, டோங்கரிவாலி, லஸ்கர்வாலி சக்கலக் வாலி ,பேடிபஜார் என ஏழு குழுக்களாக இவர்கள் வாழ்கின்றன. ஹைதராபாதில் கௌரியம்மா ராஜம்மா என்னும் இருவரால் உருவாக்கப்பட்ட பெரியவீடு சின்னவீடு என்னும் பிரிவுகள் உள்ளன. தமிழ்நாட்டில் படாவாலி, சோட்டாவாலி என்னும் இரு பிரிவுகள். இவை கிட்டத்தட்ட சாதிப்பிரிவுகளேதான். பிரிவுகளுக்கிடையே போட்டியும் மேல்கீழ் நிலையும் உண்டு. அபூர்வமாக பூசல்களும். இப்பிரிவுகளை உருவாக்கிய முன்னோடிகளை காந்தாள் என்று கூறுகிறார்கள்.
மூன்றாம்பாலினத்தவர் ஒரு தனிச்சமூகம் என்பதனாலேயே தங்களுக்கென தனிமொழியையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். தாதகுரு, தாதி [பாட்டியின்தாய்] நானகுரு நானி [ பாட்டி] குரு [தாய்] சேலா [மகள்] என பலமொழிகளிலிருந்து வந்துசேர்ந்த சொற்கள் அடங்கிய அவர்களின் தனிமொழியை பதிவுசெய்கிறார் பத்மபாரதி. பதுவா[ சாபம்] பண்டாய்தல் [கேலி] சீசா [நியாயம்] அக்குவாப்பொட்டை [விரை நீக்கம் செய்யாத அரவானி] என விரியும் அந்த மொழி விசித்திரமான ஒரு உலகை நமக்குக் காட்டுகிறது.
மூன்றாம்பாலினத்தவரின் உறவுமுறைகளைப்போலவே அவர்களின் சடங்குகளும் தனித்தன்மைகொண்டவை. விரைநீக்கம் செய்துகொள்ளுதலே முதன்மைச்சடங்கு. முதிய மூன்றாம்பாலினத்தவர் இளையவர் ஒருவரை மகள்போல தத்தெடுத்துக்கொள்ளும் சடங்கும் உண்டு. அவர்களின் சடங்குமுறைகள் நம்பிக்கைகள் ஆசாரங்கள் அவர்களின் விடுகதைகள் என விரிவாக பத்மபாரதி பதிவுசெய்கிறார். அரவான் விழாக்கொண்டாட்டம் பற்றிய மிகவிரிவான சித்தரிப்பு உள்ளது. தமிழகம் முழுக்க திருவிழாக்களில் மூன்றாம்பாலினத்தவருக்கான பங்களிப்பை வட்டார வாரியாகப் பதிவுசெய்திருக்கிறார். தமிழகத்தில் அவர்களின் தொழில்கள், பொருளியல்நிலை ஆகியவற்றையும் தரவுகளின் அடிப்படையில் வரையறைசெய்திருக்கிறார். தமிழகத்தில் மூன்றாம்பாலினத்தவர்கள் தாங்களே தங்கள் வாழ்க்கையைப்பற்றி எழுதிய பதிவுகள் உள்ளன. ஆனால் அவை எவற்றிலும் இல்லாத அளவுக்கு விரிவான களஆய்வின் விளைவான செய்திகள் இந்நூலில் உள்ளன. இனிவரும் நூல்கள் அனைத்திற்கும் இது ஒரு முன்னுதாரணம்.
முழுமையான ஒரு உலகை காட்டும் அரியநூல் இது. பதிவுசெய்யப்படாத ஒரு வாழ்க்கையைச் சொல்லும் முதன்மைநூல் என்றவகையில் ஆய்வுத்துறையில் இது முக்கியமானது. தமிழகத்தின் சமூகசித்திரத்தின் இருண்டபகுதி ஒன்றின் சித்திரம் என்றவகையில் இலக்கியரீதியாகவும் முக்கியமானது. அத்துடன் சமூகப்பரிணாமம் பற்றிச் சிந்திப்பவர்களுக்கும் அரிய வினாக்களையும் ஆய்வுப்புலத்தையும் அளிக்கும் நூல் இது. ஒரு மக்கள்திரள் தன்னை தனியாகத் திரட்டியாக வேண்டிய சூழல் உருவாகும்போது அது தனிமொழியை, தனியான ஒழுக்கநெறிகளை, தனித்த தொன்மங்களை, தங்களுக்குரிய வரலாற்றை எப்படி உருவாக்கிக்கொள்கிறது என்பதை இந்நூல் காட்டுகிறது. அவ்வகையில் மானுடசமூகப்பரிணாமத்தின் ஒரு சிறிய துளி இதில் உள்ளது.

http://www.jeyamohan.in/78586#.Vi5oMm4xE3o

Wednesday, October 14, 2015

திருநங்கைகள்- இவர்களும் நம்மிடையே வாழ வேண்டியவர்களே!

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

திருநங்கைகள்- இவர்களும் நம்மிடையே வாழ வேண்டியவர்களே!

     
நான் இது வரை மேற்கொண்ட ஒவ்வொரு பயணத்தின் போதும் சரி, பிற சமயங்களிலும் சரி, திருநங்கைகளைக் கண்டதுண்டு.  அவர்கள் கைதட்டிப் பணம் பெறுவதையும், அப்படிக் கிடைக்கவில்லை என்றால் ஏசுவதும், பணம் பெறும் வரை நின்று கொண்டு இருப்பதும், ஆண்களின் மீது இடித்தும், வசைபாடியும் பெறுவதைக் கண்டதுண்டு.  இதற்குப் பயந்தே பல ஆண்கள் அவர்கள் வரும் போதே பணத்துடன் தயாராக இருந்துக் கொடுத்துவிட்டுத் தப்பிப்பதையும் பார்த்திருக்கின்றேன். நானும் கொடுத்ததுண்டு.  மனம் யோசித்தது உண்டு இவர்களின் பிழைப்பு ஏன் இப்படியாகிப் போனது என்றும் பல சமயங்களில் இவர்களுக்காக இரக்கப்பட்டதுமுண்டு. எல்லோருமே இவர்களைக் கேலி செய்தோ, இல்லை வசை பாடியோதான் பார்த்திருக்கின்றேன்.  இல்லையேல் இவர்களை ஒரு காட்சிப் பொருள் போல் வேடிக்கைப் பார்ப்பதும் உண்டு.  ஒரு வேளை இவர்களது உடல் மொழியும், நடை உடை பாவனையும் இதற்குக் காரணமாக ருக்கலாம்.  ஆனால், ஏனோ, எனக்கு இவர்களின் மீது ஒரு தனி கழிவிரக்கம் உண்டு.

      இதுவரை தூர நின்று பார்த்திருந்த திருநங்கைகளிடமிருந்து சற்று வித்தியாசமான பாவனைகளுடன் இருந்த திருநங்கைகளை, எனது இப்போதைய பயணத்தின் போது, கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில், சென்னை வரவேண்டி ரயிலுக்காகக் காத்திருந்த சமயத்தில், காண நேர்ந்தது.  தாங்களுண்டு, தங்கள் வேலை உண்டு என இவர்கள் இருந்தாலும், அங்கிருந்தோர் எல்லோருமே இவர்களையே உற்று நோக்கிக் கொண்டு, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நானும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாலும், எனது பார்வையும், மன நிலையும் அவர்களை அணுகலாமா, எப்படி அணுகுவது என்ற ஒரு சிந்தனையுடன் இருந்ததை அந்த 3 திருநங்கைகளில் ஒருவர் உணர்ந்திருக்க வேண்டும்.  எனது பார்வையும் ஒரு நட்பினை உணர்த்தியதோ என்னவோ, அவர் என்னைப் பார்த்துப் புன்முறுவலித்தார்.  அதைப் பார்த்ததும், இதுதான் தருணம் என நான் அவர்களை சமீபத்து உரையாடத் தொடங்கினேன். இதுவே சற்று வித்தியாசமான சூழல் போலும். அங்கிருந்தோர் இப்போது என்னையும் வினோதமாக வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர்.

      திருநங்கைகள் என்று சொல்லப்பட்டாலும், அந்தத் “திரு” என்ற சொல்லுக்கான, ஒரு அர்த்தமாகிய, இந்த சமூகத்தில், உலகில் வாழ வேண்டிய அந்தஸ்து என்பது அவர்களிடம் எந்த வடிவிலும் இல்லை. ஆனால், திரு என்ற சொல்லின் பிரிதொரு அர்த்தம் அவர்களின் முகத்தில் மிகுதியாகவே இருப்பதாகப்பட்டது.  ஆம்!  அவர்கள் அழகாக இருந்தார்கள். இல்லை ஒரு வேளை எனது கண்களுக்கு அப்படித் தோன்றியதாகவும் இருக்கலாம். உரையாடியதில் அவர்கள் மிகவும் நல்ல மனது படைத்தவர்களாகத் தெரிந்தார்கள்.  படித்தவர்கள். அவர்களது உடலமைப்பு, அவர்களை ஆண்கள் என்று பறையடித்தாலும், தங்களைப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்திருந்தார்கள். மிகவும் தன்மையாகப் பேசினார்கள். நல்ல பண்புகளும், இந்த சமூகம் தங்களைப் புறக்கணித்தாலும், சமூகம் பற்றிய நல்ல சிந்தனைகளும், சாதாரண மக்களின் இன்னல்களையும் உணர்ந்தவர்களாகவே தெரிந்தார்கள்.  சமூக அவலங்களைப் பற்றிக் கவலைப்பட்டார்கள். எனது நேரிடையான கேள்விகளுக்குக் கூட எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல், கோபப்படாமல், மிகவும் நேர்த்தியாகப் பேசினார்கள்.

      பங்களூரைச் சேர்ந்தவர்கள்.  பிறப்பால் ஆண்களாக இருந்தாலும், சிறுவயது முதலேயே, பெண்களாக வாழவேண்டும் என்ற மனநிலையுடன், தங்களைப் பெண்களாக உருவகப்படுத்திக் கொண்டு வாழ விழைந்ததாகச் சொன்னார்கள்.  மூவரின் குடும்பங்களும் பொருளாதார அடிப்படையில் மிகவும் உயர்ந்தவர்கள். இந்த மூவரில், 12 வருடங்களாக ஒரு திருநங்கையாக வாழ்ந்து வருபவரின் பெற்றோர் இட்ட பெயர் க்ளைஜர், தற்போதைய பெயர் அமீஷா. 10 ஆம் வகுப்பு வரை கல்வி கற்றவர், வீட்டிலிருந்து துரத்தப்பட்டதால் கல்வியைத் தொடரமுடியவில்லை. 8 வருடங்களாக  இன்நிலையில் வாழ்பவர் ராகுல் எனப்படும் ரம்யா.  வீட்டின் ஆதரவு இல்லாதவர்.  பெற்றோரும், சகோதரரும் மிகவும் நல்ல பதவியில் இருப்பவர்கள். பி.காம் படித்திருப்பவர். மிக நன்றாக, தூய்மையான ஆங்கிலத்தில் உரையாடுகிறார். தனது படிப்பிற்கான செலவை தானே ஈட்டிப் படித்தவர். இங்கு “ஈட்டி” எனப்படுவது நிஜத்தில் ஈட்டிதான்.  பணம் ஈட்டப்பட்ட முறை. படிப்பிற்குப் பிறகு, பங்களூரில் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில், ஹெச் ஆராக வேலை செய்திருக்கிறார் ஒரு வருடம். பின்னர் அலுவலகத்தில் சில சலுகைகள் இவருக்கு வழங்கப்படுவதில் பிரச்சினைகள் ஏற்பட இவர் புறம் தள்ளப்பட்டிருக்கின்றார். தற்போது பெரும்பான்மையான திருநங்கைகள் போல வாழ்க்கை. மூன்றாமவர் பெயர் பரத்.  தற்போது பூமிகா. 5 வருடங்களாக இந்த வாழ்க்கை. படித்திருப்பது +2.  என்னுடன் முழுமையாக உரையாடிவர் ரம்யா.

      படிக்கும் காலத்தில் நடந்த சிலவற்றைச் சொல்லுவதற்கில்லை.  அதை எழுதினால் சில பிரச்சினைகள் வரக்கூடும்.  மதிப்பெண்கள் கிடைக்க வேண்டுமென்றால், ஒரு சில தகாத உறவுகள் போன்ற இன்னல்கள் இருந்திருக்கின்றது.  

    இவர்களுக்கு குரு ஒருவர் இருப்பாராம். அவர் இவர்களுக்காக, ஒருவருக்கு 2 லட்சம் செலவழிப்பாராம். இவர்கள் அவருக்கு அதை 4 லட்சமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டுமாம். இவர்கள் மிகவும் அழகாக வேண்டும் என்பதற்காக, 41 நாட்கள் யாரையும் காணாமல், ஒவ்வொரு நாளும் ஒரு திருநங்கை இவர்களுக்கு முதலில் மஞ்சள் அரைத்து உடம்பு முழுவதும் பூசுவார்களாம். பின்னர், 10, 15 அடி தூரத்தில் நின்று கொண்டு, கொதிக்கக் கொதிக்கத் தண்ணீரை இவர்கள் மீது வீசிக் கொட்டுவார்களாம், பிறப்பு உறுப்புகள் உட்பட. இவர்கள் அலறுவார்களாம். அதன் பின் படுக்க வைத்து தூய்மையான சந்தனம் இழைத்து அதை உடம்பு முழுவதும் பூசுவார்களாம்.  வேப்பிலையால் உடம்பு முழுவதும் வருடுவார்களாம்.  இப்படி 41 நாட்கள் செய்த பிறகு உடம்பிலுள்ள முடிகள் எல்லாம் போய்விடுமாம்.  41 நாட்கள் முடியும் அன்று, இவர்களை பாலூற்றிக் குளிக்க வைப்பார்களாம். இதற்குப் பெயர் ஜல்சா. 

    அன்று வயதுக்கு வந்த பெண்பிள்ளைகளுக்கு அலங்காரம் செய்வது போல் இவர்களுக்கும், அணிகலன்கள், மெட்டி, கொலுசு அணிவித்து, இவர்களுக்குச் சேவை செய்த திருநங்கைகளுக்கு தங்கத்தில் சிறியதாக ஏதாவது பரிசு அளிப்பாராம் குரு.  அதைப் போல் அந்த சேவை செய்த திருநங்கைகள் இவர்களுக்குப் பரிசு அளிப்பார்களாம். பின்னர் அன்று செருப்பு தைப்பவர் ஒருவரை அழைத்து வந்து இவர்களுடன் முதலிரவுக்கு ஏற்பாடுகள் நடக்குமாம்.  இதற்கு என்றே செருப்பு தைப்பவர்கள் குழு இருக்கின்றதாம்.  வருபவர் இவர்களுக்கு தாலி கட்டி விட்டு அன்று ஒரு இரவு தங்கிவிட்டுச் சென்றுவிடுவாராம்.  பின்னர் இவர்களைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாராம்.  ஆனால் அவரது செருப்பு மட்டும் நினைவாக இவர்களோடு விட்டுச் செல்வாராம்.  இதற்குப் பெயர் தந்தா என்பதாம். இன் நிகழ்வுகளுடன் இவர்களுக்கு ஒரு சில அறுவை சிகிச்சைகள் நடத்துவதற்கும் சேர்த்து குரு 2 லட்சம் செலவழிப்பாராம்.  இவர்கள் அவர்க்கு அதை 4 லட்சமாகத் திருப்பித் தரவேண்டுமாம். இன் நிகழ்வுக்குப் பின்னர் அவர்கள் ஒவ்வொரு ஆணுடனும் இரவுகள் கழித்து பணம் சம்பாதிக்கலாமாம். மனதளவில் மிகவும் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கின்றார்கள். தங்களை பெற்றோரும், இந்த சமூகமும் ஒதுக்குகின்றதே என்ற ஒரு மனப்பான்மையுடன் இருக்கின்றார்கள்.

      இவர்களிடம் நான் கேட்ட கேள்வி, ஏன் இப்படிப்பட்ட ஒரு அவல நிலை? எதற்காக இப்படி வாழ வேண்டும்?  இப்படித்தான் வாழ வேண்டுமா?  ஏன் உங்களுக்கு இருக்கும் திறமையை வெளிக் கொண்டுவந்து, உங்கள் படிப்பை உபயோகப்படுத்தி உங்கள் காலில் நிற்க முயற்சிக்கலாமே. 

“எங்களுக்கும் ஆசை இருக்கின்றதுதான் மேடம்.  சொல்லப் போனால், நான் நன்றாக ஆங்கில வகுப்புகள் எடுப்பேன்.  நடன வகுப்புகள் எடுப்போம்.  ஆனால், எங்களை யாரும் சேர்த்துக் கொள்வதில்லை. எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.  நாங்கள் எதிர்ப்பார்ப்பது எங்களிடமும் அன்பு செலுத்தும் ஆண் துணை கிடைப்பாரா என்றுதான்” என்றார்.  தற்போது அவர்களை பங்களூரில், செல்வந்தர் ஒருவர் – ஷிவானி – அவரும் இவர்களைப் போன்றவர்தானாம்.  ஆனால், ஆணுடைதான் அணிந்திருப்பாராம் - இவர்களைத் தத்தெடுத்து, கவனித்துக் கொள்கின்றாராம்.  ஆனால், இவர்கள் பிச்சை எடுத்துத்தான் பணம் ஈட்டுகின்றனராம். “மேடம் நீங்கள் இதை எழுதுவதினால், எங்களுக்கு யாராவது ஏதாவது வேலை கொடுப்பார்களா?  எங்களுக்கு ஏதாவது நல்ல வேலை கிடைக்குமா?” என்று கேட்டார். 

      “நான் வேலை வாங்கித் தரமுடியும் என்று என்னால் எந்த உறுதியும் கொடுக்க முடியாது.  ஏனென்றால், நான் அந்த அளவிலான நிலையில் இல்லை. ஏதோ எழுதுபவள். இதையும் எழுதுகின்றேன்.  யாராவது இதைப் படிப்பவர்கள் உங்களுக்கு வேலை தர முன்வந்தால், நான் மிகவும் மகிழ்வேன்” என்றேன். அவர்களின் விருப்பம் நிறைவேறினால் மிகவும் நன்று.

      நான் அவர்களிடம் சொன்னது இதுதான். “நீங்கள் பெண்களாக பாவித்து நடந்து கொள்வதிலோ, உடை அணிவதிலோ தவறு இல்லை. ஆனால், அதையும், இன்னும், மிகவும் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் அளவு அணிந்து கொண்டு, பிறர் உங்களைப் பார்த்தால் உயர்வாக நினைக்கும் அளவு உங்களை மாற்றிக் கொண்டு, உங்கள் திறமையை வெளிக் கொண்டுவந்து உங்களை நிலை நிறுத்திக் கொள்ள ஏன் முயற்சி செய்யக் கூடாது? அப்படிச் செய்து பாருங்கள், உங்கள் வேலை வாய்ப்பு நிச்சயமாக அதிகரிக்கும். முயன்றுதான் பாருங்களேன்.  இப்படிக்கு ரோஸ் எனும் நிகழ்ச்சியை நடத்திய ரோஸ், மிகப் புகழ் வாய்ந்த நடனமணியான நர்த்தகியைப் போல ஒரு உயர்வான வாழ்க்கையைத் தேடிக் கொள்ளலாமே.”

      “கண்டிப்பாக மேடம், நீங்கள் சொல்லுவது போல முயற்சிக்கின்றோம். நீங்கள் இப்படி, எங்களையும் மதித்து, அன்புடனும், அக்கறையுடனும் பேசுவது, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எங்களுடன் தொடர்பில் இருங்கள்.  அவ்வப்போது இது போன்று எங்களுக்கு நல்ல விஷயங்கள் சொல்லுங்கள் மேடம்”  என்று சொல்லித் தனது அலைபேசி எண்ணையும் கொடுத்தார்.

      இவர்களும் இந்த சமூகத்தின் ஒரு அங்கத்தினரே! இவர்களும் இந்த சமூகத்தில் வாழ வேண்டும். வாழ உரிமை உள்ளவர்களே! நாம் இவர்களைப் புறக்கணிக்காமல், இவர்களையும் ஏற்றுக் கொண்டு, இவர்களை ஆதரிக்கும் விதத்தில், அவர்களது திறமைக்கு ஏற்ப வேலை வாய்ப்பு அளித்து ஒரு சமூக அந்தஸ்து அளிக்கலாமே. அரசும் சில நல்ல திட்டங்கள் வகுத்திருக்கின்றதுதான்.  ஆனால், அதிகம் பேசபடுவதில்லை. மறுவாழ்வு கொடுக்கும் விதத்தில், மனதளவில் பயிற்சி கொடுத்து, தாழ்வு மனப்பான்மையை அகற்றி வேலை, கல்வி, வேலை வாய்ப்புகளும் கொடுத்து, தன்னம்பிக்கையும், தன் காலில் நிற்கும் அளவிற்கான வாழ்வியல் சூழலை உருவாக்கி அவர்களையும் நம்மிடையே வாழ வழிவகுக்கலாமே. 

-கீதா

  
 http://thillaiakathuchronicles.blogspot.com/2015/02/Transgender-Thirunangaigal.html

மூன்றாம் பாலினமாக திருநங்கைகள்

திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக சட்டப் பூர்வமாக அங்கீகரித்து, அவர்களுக்கு அனைத்து உரிமை களையும் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது இந்திய மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். பாலினம் என்ற வகைப்பாட்டிலும், வரையறுப்பிலும் ஆண் அல்லது பெண் என்று மட்டுமே அதிகாரப் பூர்வமாக இருந்த நிலையில் இனி மூன்றாவது பாலினமாக திருநங்கையரும் இணைக்கப்படுவது அவர்களுக்கு வழங்கப்படும் சட்டவழி தகுநிலை ஆகும்.
transgender
தேசிய சட்டப் பணிகள் ஆணையம் தாக்கல் செய்த பொதுநல மனுவின் மீதான தீர்ப்பில் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கே. எஸ். ராதா கிருஷ்ணன் மற்றும் ஏ. கே. சிக்ரி தங்களது தீர்ப்பில் கூறியிருக்கும் அனைத்துக் கருத்துக்களும் முத்தாய்ப்பானவை.
திருநங்கையர் உரிமைகள் தொடர்பாக அர்ஜென்டினா நாடு அண்மையில் இயற்றிய பாலின அடையாளச் சட்டம் உலகளாவிய அளவில் பாலின அடையாள உரிமை குறித்த முற்போக்கான சட்டமாகும். தனி மனிதர் விரும்பும் பாலின அடையாளத்தை முழுமையாக அங்கீகரிக்கும் உரிமையை சட்டப் பூர்வ மாக்குகிறது, அச்சட்டம்.
தனிமனிதர் ஒவ்வொருக்குமான பாலின அடையாளம் அவரவருக்கான அடிப்படை உரிமை. இதை இன்றைய சூழலில் இந்திய உச்சநீதி மன்றம் தன் தீர்ப்பில் உத்தரவாக வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் திருநங்கைகளின் வாழ்வும், யதார்த்த சூழலும் வேறுமாதிரியாக உள்ளது.
திருநங்கைகள் அனுபவிக்கும் அவமானங்களும் சவால்களும் திருநங்கையரின் அவலமான வாழ்க்கையும், ஒவ்வொரு நாளும் அவர்கள் சுமக்கும் வலியும், அனுபவிக்கின்ற அவமானங்களும், பாகுபாடுகளும் எதிர் கொள்ளும் சவால்களும் ஒன்றல்ல, இரண்டல்ல! அவர்கள் மீது அரசு இயந்திரங்களும், இந்தச் சமூகமும் ஈவு இரக்கமின்றி தொடுக்கின்ற உரிமை மீறல்கள் கணக்கிலடங்கா! கொடுமையான சமூகப் புறக்கணிப்புகளும், ஒதுக்குதல்களும் திருநங்கையர் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாகவே இருந்து வருகின்றன. திருநங்கையராக இருப்பதாலேயே, அவர்களை மனிதர்களாக வாழ்வதற்கு தகுதியற்றவர்களாக ஆக்கிவிடுகிறது இந்தச் சமூகம்! அவர்களது இருத்தலும், நடமாட்டமும் நம்மில் பெரும் பாலானோருக்கு கேலிக்குரிய பொருட்களாகவே ஆகிவிட்டன என்பதுதான் உண்மை.
சட்டரீதியான உரிமைகள் மறுக்கப்பட்டு, வாழ்வதற்குரிய வழி வகைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, சமூகத்தின் விளிம்பு நிலையில் விழி பிதுங்கி நிற்கும் ஒரு பாலினத்திற்கு கல்வியும், வேலைவாய்ப்புகளும், மருத்துவ வசதியும் எப்படி கிடைக்கும்? பேருந்து மற்றும் தொடர்வண்டி நிலையங்களிலும், பிற பொது இடங்களிலும் திருநங்கைகள் தீண்டத்தகா தோராகத் தானே பார்க்கப்படுகின்றனர்? பெரும்பாலான திருநங்கைகள் வேறு வழியின்றி பாலியல் தொழிலுக்கும், பிச்சை எடுத்தலுக்குமே தள்ளப்படுகின்றனர்.
பாலியல் வன்கொடுமைகள்
பாலியல் வன்கொடுமைகளால் பெண்களைப் போலவே மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுவோர் திருநங்கையர். அவர்கள் மீது தொடுக்கப்படும் கொடூரமான உரிமை மீறல்கள், குறிப்பாக பாலியல் வன்முறைகள் குறித்து மக்கள் சிவில் உரிமைகள் கழகம் சென்ற ஆண்டு அறிக்கை ஒன்றை வெளிக் கொண்டு வந்தது. டெல்லி உயர்நீதி மன்றத்தில் நாஸ் பவுண்டேசன் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட இவ்வறிக்கையில் இடம்பெற்ற வன்முறைகள் மிகவும் கொடூரமானவை. அதன் அடிப்படையில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், அதனைத் தொடர்ந்து நீதியரசர் வர்மா குழு வழங்கிய பரிந்துரைகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் பாதிக்கப் பட்டோர் பட்டியலில் பெண்களோடு திருநங்கைகளையும் இணைக்க வேண்டும் என்ற ரீதியில் நீதியரசர் வர்மா குழு சில பயனுள்ள பரிந்துரைகளை முன்வைத்தது. ஆனால் சென்ற ஆண்டு கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டத்திருத்தம் இந்த ஆக்கப்பூர் வமான பரிந்துரைகளைக் கணக்கில் கொள்ளவே இல்லை. பாலியல் வன்முறை என்பதை வரட்டுத்தனமான பிற்போக்கான பார்வையில் மட்டுமே பார்க்கின்ற ஆணாதிக்க, நிலமானியச் சிந்தனைதான் குற்றவியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தோரிடம் வெளிப் பட்டது.
வேலைவாய்ப்பிற்கான உத்தர வாதமின்மை
வேலை வாய்ப்புக்கான எந்த உத்திரவாதமும் இன்றி, தங்களை ஒரு பாலின அடையாளத்திற்குள் கொண்டு வர இயலாத நிலை அண்மையில் வெளிவந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் இனி மாற வாய்ப்புண்டு. சாந்தி சௌந்தர ராஜன் என்ற திருநங்கை தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வாங்கி பெருமை தேடித் தந்தவர். பாலின அடையாளம் காரணமாக தான் பெற்ற வெள்ளிப் பதக்கத்தை இழந்தது பலருக்கும் நினைவு இருக்கும்.
அதுபோல கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு திருநங்கை மாநில அளவிலான போட்டிகளில் பல் வேறு பதக்கங்களைப் பெற்றவர். காவல்துறையில் சேர ஆசைப்பட்டு அதற்கான தேர்வில் வெற்றியும் பெற்று விட்டார். பாலின அடையாளம் காரணமாக அவர் வேலையில் சேர இயலாமல் போய் விட்டது. தகுதி, திறமை இருந்தும் இது போன்ற திருநங்கைகள் தங்களைத் தேடி வரும் வாய்ப்புகளைப் பயன் படுத்த முடியாமைக்குக் காரணம் திருநங்கையினருக்கு முறையான சட்டபூர்வ அந்தஸ்து வழங்கப்படாமை.
பாலின அடையாளம் ஓர் அடிப்படை உரிமை
பாலின அடையாளம் என்பது வாழ்க்கையின் அடிப்படையான அம்சங்களில் ஒன்றாகும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ், கடவுச் சீட்டு, வாகன ஓட்டுனர் உரிமம், குடும்ப உறுப்பினர் அட்டை, வாக்காளர்அட்டை போன்ற அனைத்து அடையாளச் சான்றிதழ்களிலும் இனி மூன்றாம் பாலினம் இடம் பெறும். வாக்களிக்கும் உரிமை, சொத்துக்களைப் பெறும் உரிமை, சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் உரிமை போன்ற அனைத்து அடிப்படை உரிமைகளும் இந்த சட்டப்பூர்வ அடையாளம் மூலம் இனி திருநங்கைகளுக்குக் கிடைக்கப்பெறும்.
திருநங்கையினர் வாழ்க்கைச் சூழல் பற்றி ஆராய்ந்து, அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான பரிந்துரைகளை முன்வைக்கு மாறு மத்திய அரசு ஒரு நிபுணர் குழுவை நியமித்துள்ளதாகவும், மூன்று மாங்களுக்குள் இந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அக் குழு முன்வைக்கும் பரிந்துரைகளை ஆறு மாதங்களுக்குள் நடைமுறைப் படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படப் போவதாக மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.
தேர்தலில் ஆண் பெண் என்ற வகைப்பாட்டில் மட்டும் அல்லாது திருநங்கையர் மூன்றாம் பாலினமாக “மற்றவர்கள்’’ என்று குறிப்பிட்டு தங்களது தனித்த அடையாளத்தை நிலைநாட்டி தேர்தலில் பங்கேற்கலாம் என்ற அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் 2010 - ஆம் ஆண்டு வெளியிட்டது நினை விருக்கலாம்.
தமிழகத்தில் திருநங்கைகள்
தமிழகத்தில் ஏறக்குறைய 3 இலட்சம் திருநங்கையர் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. திருநங்கையருக்கான உரிமைகள் என்ற அளவில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் ஒரு படி சிறப்பாகச் செயல்படுவதை பெருமையோடு இங்கே குறிப்பிடலாம். குடும்ப அட்டைகளில் பாலினம் என்ற வரையறையில் மூன்றாம் பாலினத்தையும் இணைத்திட 2008 ஆம் ஆண்டிலே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த முடிவு. திருநங்கையரின் குடிமையுரிமை சார்ந்த தொடர் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என்றே சொல்லலாம்.
திருநங்கைகளுக்காகவே தனிவாரியம் ஒன்று தமிழக சமூக நலத்துறையால் அப்போதே உருவாக்கப்பட்டதும், சட்டரீதியாக பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள தமிழக அரசு அங்கீகாரம் அளித்ததும் குறிப்பிட்டு சொல்லத்தக்க நிகழ்வுகள்.
ஆனால் இவை மட்டுமே போதாது. அவர்களது வாழ்வு மேம்பட இன்னும் பல சிறப்பு நலத்திட்டங்களை அரசு உருவாக்கிட வேண்டும். அவர்கள் சொந்தக்காலில் நிற்கவும், சுயமரியாதையோடு வாழவும், வருமானத்தை உருவாக்கிக் கொள்ளவும் அவர்களுக்கு முறையான வாழ்வாதாரப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். மிகக்குறைந்த வட்டியில் தொழிற் கடன்கள் வழங்கப்பட வேண்டும். அரசு மற்றும் தனியார் துறைகளில் திருநங்கைகள் வேலைகளில் சேர்ந்திட அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அரசு உத்திரவாதப்படுத்த வேண்டும்.
ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி
திருநங்கைகளை மைய நீரோட்டத்தில் இணைக்கவும், அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்புகளில் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கவும், சமூகத்தில் திருநங்கைகள் பற்றிய பார்வையும் கண்ணோட்டமும் மாறவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசுகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். சிவில் சமூகக் குழுக்கள் குறிப்பாக மனித உரிமைத் தளத்தில் பணியாற்றும் அமைப்புகளும் கல்வி நிறுவனங்களும் திருநங்கையினருக்கான உரிமைகள் குறித்த கண்ணோட்டத்தை மக்களிடையே மாற்றிட தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
முறையான பாலியல் கல்வியை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு வழங்குவதன் மூலம் இளைய தலைமுறையினரிடம் திரு நங்கைகள் பற்றிய சரியான பார்வையை கொண்டு செல்ல முடியும். திருநங்கைகளைக் கேலிப் பொருளாகவும், பரிகாசத்திற்குரிய நபர்களாகவும் ஊடகங்கள் சித்தரிப்பதை தடை செய்யவேண்டும்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருப்பதைப்போல மனிதர்கள் என்ற முழுமையான சட்டப்பூர்வ அந்தஸ்தும், சட்டரீதியான அனைத்துப் பாதுகாப்பும் அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருப்பது திருநங்கையரின் வாழ்க்கையில் ஒளியேற்றும்!

எனக்கு தெரிந்த திருநங்கைகள்

எனக்கு தெரிந்த திருநங்கைகள் (அரவாணிகள்) !

லிவிங்க் ஸ்மைல் வித்யாவை பதிவுகள் வழியாக அறிந்திருக்காவிடில் இந்த 'அரவாணி' என்ற சொல் பலருக்கும் அருவெறுப்பாகவே இருக்கும், தமிழ்மணத்தில் இணைவதற்கான முதல் முயற்சியில் புதிய பதிவர்கள் சேர்க்கைப் பட்டியலில் அவரது பதிவு பற்றிய குறிப்பும், எழுதும் தான் ஒரு அரவாணி என்றும் குறிப்பிட்டு இருந்தார், 'பரவாயில்லையே...இவர்களில் கூட பதிவு எழுதுபவர்கள் இருக்கிறார்களா ?' என்று நினைத்துக் கொண்டிருந்தேன், அடுத்த நாட்களில் அந்த பதிவு சேர்க்கைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. அதற்கான காரணம் தெரியவில்லை. பிறகு இருவாரம் கழித்தே அவரது பதிவின் பெயர் சேர்க்கைப் பட்டியலில் மீண்டும் வந்து அதன் பிறகு தமிழ்மணத்தில் பதிவுகள் திரட்டப்பட்டு வந்தது, முதலில் சேர்த்து பிறகு ஏன் திரட்டாமல் விட்டார்கள் என்பதற்கான காரணமாக நான் நினைத்தது, 'போலிப் பெயர்களில்' வரும் வழக்கமான பதிவாக (சோதனை செய்து) இருக்கக் கூடும் என்று நினைத்து பட்டியலில் இருந்து நீக்கியிருக்கிறார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு நண்பர் பாலபாரதி போன்றோர் முயற்சியால் சேர்த்திருப்பார்கள் என்றே நினைத்தேன். நிகழ்வை வைத்து இது எனது ஊகம் தான். ஆனால் முதலில் பட்டியலில் வந்து பிறகு திரட்டாமல் போனக் காரணம் எனக்கு சரியாகத் தெரியவில்லை.

*******

அரவாணிகள் பற்றி முதன் முதலில் அறிந்து கொள்ளும் போது வயது 7 இருக்கும் என்று நினைக்கிறேன். எங்கூரிலிருந்து நாகூருக்குச் செல்லும் சந்தனக் கூடு பத்து நாள் திருவிழாவின் போது, நாகையில் இருந்து நாகூருக்கு நடைப் பயணமாக சாலையில் கப்பல்கள் இழுத்துச் செல்லும் மாலை நேர நிகழ்வில், மாறுபட்ட பெண் நிறைய பவுடர் மேக்கப் உடன் ஆடிக் கொண்டே செல்வார், வயசுப் பசங்கள் அவளைச் சீண்டுவார்கள், அதன்பிறகு அருகிலும் வீட்டிலும் பேசிக் கொண்டு இருந்ததை வைத்து அவர் ஆண்தான் பெண்ணாக உடை அணிந்திருக்கிறார், என்று தெரியவந்தது...அந்த பெண்ணை கோஷா என்று சொல்வார்கள். 10 - 15 ஆண்டுகளாக அந்த கோஷாவை ஆண்டு தோறும் முழு மேக்கப்படில் அதே நிகழ்வில் பார்த்து இருக்கிறேன். முதன் முதலில் இளமையாக இருந்தவர் 50 வயது மேல் கன்னங்கள் ஒட்டியபடி இருந்தாலும் முழு மேக்கப் உடன் உற்சாகம் குன்றாமல் ஆண்டு தோறும் பலரை மகிழ்வித்தப்படி ஊர்வலத்தில் செல்வார்.

அதன்பிறகு 7 ஆம் வகுப்பு படிக்கும் போது எங்கள் பள்ளியின் (நடராஜன் தமயந்தி மேல் நிலை பள்ளி) அருகே புளியமரம் என்ற இடத்தில் சைக்கிள் சுற்றுதல் என்ற நிகழ்ச்சி நடைபெறும், 10 நாள் ஒருவர் கீழே இறங்காமல் சுற்றிவர மாலை 7 முதல் இரவு 11:30 வரை கலை நிகழ்ச்சிகள், பெரும்பாலும் சினிமா பாடல்களுக்கு ஆடுவார்கள், ரெக்கார்ட் டான்ஸ் அளவுக்கு மோசமாக இருக்காது, அதில் பெண்களாக ஆடுபவர்கள் அனைவரும் அரவாணிகளாக இருந்தனர். நிகழ்ச்சியின் போது பெண்களைப் போல் மேக்கப் போட்டு இருப்பார்கள், காலையில் அந்த பகுதிவழியாகச் செல்லும் போது பார்த்தால் கைலி மற்றும் மேலே ஒரு சட்டைப் போட்டு, கொண்டையுடன் இருப்பார்கள், முகத்தில் முடி மழித்த அடையாளம் இருக்கும்.

எங்கள் ஊரில் அரவாணிகளை யாரும் கேலி செய்வது கிடையாது. முன்பெல்லாம் நாகூர் / நாகைப் பகுதியில் அரவாணிகள் வீட்டு வேலை செய்வார்கள். பொது இடங்களில் பார்ப்பது அரிதுதான். எனக்கு ஒரு 18 வயது இருக்கும் போது, வீட்டின் அருகே இருக்கும் டீ கடையில் ஒரு அரவாணி வேலை செய்தது அதற்கு ஒரு 16 வயது தான் இருக்கும் என்று நினைக்கிறேன், டீ கடைக்கு தேவையான தண்ணீரை எடுத்துச் செல்ல எங்கள் வீட்டு தண்ணீர் பம்புக்குத்தான் வரும், இடுப்பில் தண்ணீர் குடத்தை சுமந்து பெண்ணைப் போன்ற நளினத்தில் வரும், பெண்ணுடை எதையும் அணிந்திருக்காது, கைலியும் மேலே முண்டா பணியுனும் போட்டு இருக்கும், பேச்சுக் கொடுத்தால் பேசும். நாங்கள் யாரும் எதிரே கிண்டல் செய்வது கிடையாது, பின்னால் அதன் நடையைப் பார்த்து சிரிப்போம், அது அதை கவனித்துவிட்டால், கட்டைக் குரலில் 'என்னப் பார்க்கிறிங்க...நான் ஒம்போது அப்படித்தான் நடப்பேன்...எங்க கட்டை வேகுற வரைக்கும் இப்படித்தான்...' என்று சொன்னதும் அதுவே தன்னை இப்படிச் சொல்லிக் கொள்கிறதே என்ற திகைப்பும் பரிதாபமும் வந்தது. அதன் பெயர் நடராஜன், ஆனால் அதனை ஒருமுறை பார்ப்பவர்கள் மீண்டும் அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய தனிப்பட்ட கை கால் அமைப்பு இருந்தது, கை, கால்களில் ஆறு ஆறு விரல்கள், இரண்டு கையும் சேர்த்து 12 விரல்கள், அதே போல் கால்களில் மொத்தம் 12 விரல்கள். விரல் அமைப்புகளி பார்ப்பத்தற்கு வேறுபாடு தெரியாது, எண்ணிப் பார்த்தால் மட்டுமே கூடுதலாக இருப்பது தெரியும் அளவுக்கு 6 விரல்களும் வரிசைப்படி இருந்தது. 'பெண்ணாக நடந்து கொள்வதை திருத்துவதற்காக உடலில் சூடுபோட்டாங்க, கட்டி வச்சி உறிச்சாங்க அதான் ஓடிவந்துவிட்டேன்' என்று அதன் கதையைச் சொல்லியது,
('அது' என்று இங்கே குறிப்பிட்டு இருப்பது அஃறினை பொருளில் அல்ல, நான் அப்போதைய நினைவில் இருந்து எழுதி இருக்கிறேன்) கிட்டதட்ட ஒரு மூன்று மாத காலம் இருக்கும், அதன் பிறகு நடராஜனைக் காணவில்லை. அங்கே உள்ள பசங்களை விசாரித்தால், அதைப் பல இளவட்டங்கள் இரவில் வட்டமிடுவதால் கடைக்காரர் துறத்திவிட்டார் என்று சொன்னார்கள். அதுவும் சில சிலுமிஷங்களைச் செய்ததாக நெருங்கிய நண்பர்கள் சிலர் சொன்னார்கள்.

ஈராண்டுகள் கழித்து சென்னையில் வேலைக்குச் சென்ற பிறகு ஒரு ஞாயிறு மாலை தி.நகரில் நடந்து கொண்டு இருக்கும் போது, பேருந்து நிலையம் எதிரே அரவாணிகள் கூட்டம் ஒன்று கடைகடையாக ஏறி இறங்கினார்கள், ஒரு அரவாணியை எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே என்று பார்த்தேன்...அட நடராஜன்...கைகால்களில் 12 விரல்கள்...ஆனால் சேலையில் இருந்தது. '....நடராஜன் இங்கே எப்படி ...?' என்று நான் கேட்பதைத் திரும்பிப் பார்த்துவிட்டு .....வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடியது...'ஏன் ஓடுரே...நடராஜன் நில்லு ஓடாதே...'. நிற்காமல் வேகமாக ஓடி மற்ற அரவாணிகளையும் இழுத்துக் கொண்டு கடைக்குள் சென்றுவிட்டது, அதற்கும் மேல் செல்ல எனக்கும் தயக்கம், மூன்று அரவாணிகளும் தவறாக புரிந்து கொண்டு என்னை தாக்கிவிட்டால் அங்கிருந்து கடந்து சென்றேன். எனக்கு சிறுது ஏமற்றம் தான். சும்மா விசாரிக்கலாம் என்று நினைத்தால் 'அது சென்னையில் தான் இருக்கிறது என்று சொல்லிக் காட்டிக் கொடுத்துவிடும் அதனுடைய ஊர் காரன்' என்று நினைத்து ஓடி இருக்கும் என்றே நினைத்தேன்.

*******

1992 வாக்கில் பெங்களூரில் வேலை செய்தபோது சு.சமுத்திரம் அவர்களின் 'வாடாமல்லி' தொடர் ஆனந்தவிகடனின் வந்தது, அந்த வாரத்தில் அந்த கிழமை எப்போது வரும் என்று காத்திருந்து ஆவலுடன் படிக்கும் அளவுக்கு அந்த தொடர் அமைந்து இருந்தது, அப்பொழுதுதான் அரவாணியாக (சுயம்பு என்ற பாத்திரம்) மாறும் ஆண் உடலில் ஏற்படும் மாற்றம், அவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல், அடைக்கலம் தேடி ஓடுவது, அவர்களின் மும்பய், டெல்லி வாழ்க்கை, ஆண் உறுப்பை அகற்றிக் கொள்ளும் சடங்குகள், அவர்களைப் புரிந்து கொள்ளாத சமூக அவமானத்தில் இருந்து அவர்கள் மீண்டு வர நினைத்து துடிப்பது போன்றவற்றையெல்லாம் அந்த நாவல் வழியாகவே அறிந்து கொண்டேன். அந்த தொடர் கதையைப் படித்து முடித்த பிறகு நான் 'அதுவாக' நினைத்துக் கொண்டு இருந்த அரவாணிகளை 'அவளாக' நினைக்க ஆரம்பித்தேன்.

அரவாணி என்ற பெயருக்கு பதிலாக திருநங்கை என்ற சொல் பயன்படுத்துகிறார்கள், அரவாணி என்ற பெயரை விட திருநங்கை என்ற பெயரே பொருத்தமானது, மதச் சார்பற்றது. மூன்றாம் பாலினமாக அவர்கள் கேட்கும் அங்கீகாரம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். திருநங்கைகள் பற்றிய சமூகப் பார்வை மாறிக் கொண்டே வந்திருக்கிறது. ஆணும் பெண்ணும் சமம் என்று சித்தாந்தம் பேசுகிறோம், ஆனால் அப்படி சமமாக இருப்பவர்களை மதிக்கிறோமா என்ற கேள்வியாகவே அரவாணிகள் நிற்கிறார்கள். பிச்சைகாரர்கள் கூட இவர்களை ஏளனமாகப் பார்க்கும் இழிநிலை மாறிவருகிறது என்பது ஆறுதலான ஒன்று.


அரவாணிகள் - உடலியல், மொழியியல், வாழ்வியல் என்ற நூலை தற்பொழுது வாசித்துக் கொண்டு இருக்கிறேன். சகோதரி லிவிங் ஸ்மைலின் கட்டுரைகள் கூட அதில் இருக்கிறது. தொகுப்பாசிரியர் மகாராசன். அதுபற்றி பிறகு எழுதுகிறேன். 
 
http://govikannan.blogspot.in/2008/11/blog-post_4604.html

திரைப்படங்களில் திருநங்கைகள்

செவ்வாய், 14 ஜூன், 2011

திரைப்படங்களில் திருநங்கைகள்


இந்த சமுதாயம், திருநங்கைகளையும் ஒரினச்சேர்கையாளர்களையும், மோசமானவர்களாவும் நகைப்புக்குரியவர்களாகவும் தான் பெரும்பாலும் சித்தரிக்க முயலுகிறது.

இது வரை நமது திரையுலகம் திருநங்கைகளை வில்லன்களாகவோ,விபச்சார தரகர்களாகவோ அல்லது நைய்யாண்டிக்கு உட்ப்படுத்த படுப்பவர்களாகவோ தான் பயன்படுத்திவந்துயிருக்கின்றன.

டி.ராஜேந்தரின் ஒரு தலை ராகம் படத்திலிருந்து
கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
                      
முதல்
அமீரின் பருத்திவீரன்
ஊரோரம் புளிய மரம்… வரை.

இவர்களை முக்கிய கதை மாந்தர்களாக காட்டிய திரைப்படம் இன்னும் வரவில்லை என்கிற மனக்குறையை நீக்க வந்த திரைப்படம் தான் நர்த்தகி.
இத்திரைப்படத்தை இயக்கியவர் விஜய பத்மா.

இதற்கு முன் இவர்களைப் பற்றிய தெளிவை முன்வைத்தவர் சந்தோஷ் சிவன் , நவரஸா என்கிற திரைப்படத்தின் மூலம், இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 1,1/2 மணிநேரப்படம்.

நவரஸா (2005) திரைப்படம் என்பது திருநங்கைகளின் உலகத்தை நமக்கு அறிமுகம் செய்த முகவரியாக பார்க்கலாம்.நவரஸாவில் பொரும்பாலான திருங்கைகளின் வாழ்க்கை முறையை காட்டுவதற்கான முயற்சி(High Level View).உதாரணத்திற்கு அரவான்,கூத்தாண்டவர் கேயிலின் வழக்கங்கள்,அப்போது அங்கே நிகழும் சம்பிரதாயங்கள்…இன்ன பிற..

நர்த்தகி(2011) திரைப்படத்திற்கும்  நவரசா திரைப்படத்திற்கும்  உள்ள ஒற்றுமை என்று பார்த்தால், இரண்டு கதை கருவும் திருநங்கைகளை பற்றியது.

நர்த்தகயின் கதை சுருக்கம் : பெரும்பாலானவர்கள் போல ஒரு குடும்பத்தில் வளரும் சிறுவன் பற்றி கதை(ஆரம்பமாகிறது).
அவன் தன்னுள் இருக்கும் அவளை உணரத்தொடங்கி,
அவளை அடைவதற்கு எவ்வளவு சிரமங்களை மேற்கொள்கிறான்,
அவனின் சிறுவயது காதல்,
அவனின் மாமன் மகள் இவன் மேல் வைத்திருக்கும் காதல்
,பின்பு தனக்கான வாழ்வு சூழலலை பெற்ற பின்பு ஏற்பட்ட காதல்.. இவ்வாராக கதை நகர்த்திச்சொல்யிருக்கிறார் இயக்குநர்.


இந்த புகைப்படத்தில் இருப்பவர், நர்த்தகயில் திருநங்கையாக நடித்த திருநங்கை கல்கி. A post graduate in Journalism and Mass Communication.
இவர் திருநங்கைகளின் நலன்களுக்காக போராடி வருபவர்.
திருநங்கைகளுக்குக்கான முதல் மேட்ரிமோனியல் வெப்சைடை ஆரம்பித்தவர்.
..இப்படி கல்கிக்கு பல முகங்கள்.
கல்கியின் வலைப்பூ: http://kalki.tblog.com/

கல்கியை போல பல திருநங்கைகள் தங்களின் சுய முயற்சியினால் தங்கள் அடையாளங்களைக் களையாமல் போராடி ஜெயித்துக்கொண்டிருப்பவர்கள்.கீழே சில உதாரணங்கள்


இவர் லிவிங் ஸ்மையில் வித்யா, இவர் எழுத்தாளராகவும்,உதவி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். சில வருடங்கள் முன்பு இவரின் “நான் சரவணன் வித்யா” என்கிற புத்தகம் மிகவும் பேசப்பட்டது.
வலைப்பூ: http://livingsmile.blogspot.com/



இவரை உங்கள் அனைவருக்கும் தெரிந்துயிருக்கும், இப்படிக்கு ரோஸ் என்கிற நிகழ்ச்சி தொகுப்பாளர்,
இவர் இந்தியாவின் முதல் திருநங்கை தொகுப்பாளர்.
அதுமட்டும் அல்ல இவர் அமெரிக்காவில் பயோ மெடிக்கல் Engineeringல் முதுகலை பட்டம் பெற்றவர்.



இவர்களை புறம்தள்ளி ஒதுக்குவது நவீன தீண்டாமை.

http://kathampam.blogspot.in/2011/06/blog-post.html

திருநம்பிகளும் திருநங்கைகளும் எதிர்கொள்ளும் சவால்கள்.:-

திருநம்பிகளும் திருநங்கைகளும் எதிர்கொள்ளும் சவால்கள்.:-

திருநம்பிகளும் திருநங்கைகளும் எதிர்கொள்ளும் சவால்கள்.:-

இருவேறு உலகங்களுக்கு இடைப்பட்ட திரிசங்கு உலகத்தில் வாழ்பவரை திருநம்பிகள் என்றும் திருநங்கைகள் என்றும் சொல்லலாம். அவன் அவள் என்று இரு பாலினங்கள் மட்டுமே உயர்திணையாயிருக்க அது என்று அஃறிணையாகக் குறிப்பிடப்பட்டவர்கள் இந்தத் திருநம்பிகள் திருநங்கைகள்.

பெரும்பாலும் பதின் பருவத்துக்குமேல் தன்னைத் திருநங்கையாகவோ திருநம்பியாகவோ இனம்கண்டுகொள்வோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மூன்றுவிதமாகப் பிரிக்கலாம். குடும்ப அவமதிப்பு, சமூக அவமதிப்பு, தன் உடலில் நிகழும் பாலியல் குழப்பம். இவற்றை மீறி அவர் செயல்படமுடியாமல் தொடர்ந்து அவமானம், அருவறுப்பு, இழிவான பார்வையைச் சந்திக்கிறார்.  மனதளவில் பெண்களாக உணர்வதால் எதிர்கொள்ளும் உலகையும் பலவீனமான மனதோடே எதிர்கொள்கிறார்.



இவர்களின் பாலியல் குழப்பத்தில் இவர்களே தவிக்க ஆறுதல் சொல்ல வேண்டிய குடும்பம் இவர்களைக் கண்டு அருவெறுத்துக் கைவிடும்போது வீட்டை விட்டுவெளியேறி தன்னைப் போன்ற சகபாலர்களுடன் இணையும் இவர்கள் கைக்கொள்ளும் தொழில்கள் கடைகேட்டல், பஸ் ஸ்டாண்டு, ரயில் போன்ற பொதுஇடங்களில் பிச்சை எடுத்தல், காம நிவாரணியாகப் பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வருதல் ஆகும்.

பொது இடங்களில் இவர்களைக் கிண்டல் செய்வது, அடிப்பது , துன்புறுத்துவது பாலியல் வன்புணர்வு செய்வது, சினிமாக்களிலும், ஊடங்களிலும் கேவலமாகச் சித்தரிப்பது என நடந்து வந்திருப்பது மனித உரிமைக்கு எதிரான செயலாகும். இலக்கியத்தில் புராணத்தில் இதிகாசத்தில் கூட இவர்கள் அடுத்தபட்சமாகப் பார்க்கப்பட்டிருக்கிறார்கள்.

லிவிங் ஸ்மைல் வித்யா புதிய தரிசனம் பத்திரிக்கையில் ( ஆகஸ்ட் 1 – 14 2013, பக் 13. ) ப. திருமலைக்கு அளித்த ஒரு பேட்டியில் சொல்லும்போது /// ஈழத்தில் போர் அவலங்களுக்குப் பின்னும் மத உணர்வும் , சாதி உணர்வும், ஆணாதிக்கப் பிற்போக்குத்தனமும் இருப்பதைக் காணமுடிந்தது. தலித்துகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும், பெண்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும் சாதி இந்துக்கள் இழைத்த கொடுமைகளையும், தலித்துக்களும் இஸ்லாமியர்களும் மலையகத் தமிழ்ப்பெண்களுக்கும் இவர்கள் எல்லாரும் சேர்ந்து திருநங்கைகளுக்கும் சமபால் ஈர்ப்புடையவர்களுக்கும் இழைத்த கொடுமைகளையும் கேட்டு ஜீரணிக்க முடியாமல் நொறுங்கிப் போனேன் /// என்கிறார்.

திருநம்பிகள் பெண்ணின் உடலோடு பிறந்து ஆண் போன்ற உணர்வும் தோற்றமும் கொண்டவர்கள். இவர்களில் சிலர் ஆணைப் போல உடையணிந்து கொள்வார்கள். ஆனால் இவர்கள் அவ்வளவாக இனம் காணப்படாததால் சமூகத்தால் பெரிதான பிரச்சனைகளை எதிர்கொள்வதில்லை என்றாலும் ஒரு பெண் உடலில் பிறந்து விட்டு ஆணைப் போன்ற உணர்வும் தோற்றமும் கொண்டிருக்கிறோமே என்ற குழப்பங்கள் ஏற்படும். டாம் பாய் என்று சொல்வார்கள். சிறுவயதிலிருந்தே பையனைப் போல நடந்து கொள்வது. இது க்ரோமோசோம், டி என் ஏ ஆர் என் ஏ குறைபாட்டினால் வருவது. இந்தத் தன்மையினால் சிலர் குடும்பத்தினரால் நண்பர்களால் சிலசமயம் அவமானத்துக்குள்ளாவார்கள். திருமணம் போன்ற சமயங்களில் பெரும் தடுமாற்றமும் சமூகத்தால் அவமானமும் ஏற்படுவதுண்டு.

ஆணின் உடலோடு பிறந்து தன்னைப் பெண்ணாக இனம் கண்டு கொள்ளும் ஒரு திருநங்கை தன் உணர்ச்சிகளோடு போராடியும் உலகத்தின் பார்வையில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் பெரும் துன்பங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது, பாலியல் அங்கீகாரத்துக்காகப் போராடுவது மட்டுமல்ல குடும்பம், சமூகம் மற்றும் சுய உணர்ச்சிகளோடும் போராட்டம்தான்.

இதிலும் குடும்பமும் நண்பர்களும் கைகொடுக்க நர்த்தகி நட்ராஜ், க்ளாடி, ஸ்மைலி, கல்கி, ரோஸ் போன்றோர் இவற்றில் ஈடுபடாமல் தாங்கள் விரும்பிய துறையில் ஈடுபட்டு வெற்றிகண்டு வருகிறார்கள்.

காரைக்குடியில் பத்துப் பன்னிரெண்டு வயது இருக்கும்போது ஒரு விடுமுறை நாளில் இராமவிலாசம் தியேட்டரில் சினிமா பார்த்துவிட்டுவரும்போது அங்கே குடிசையில் பனியனும் லுங்கியும் அணிந்து சடை பின்னியிருந்த ஒருவர் ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்து வந்தார். என் கூட வந்த உறவினர் பெண் இதா பாரு ஒம்போது என்றார். உடனே அவருக்கு கோவம் வந்து அடிக்க வந்துவிட்டார். பயந்து வேகமாக ஓடி வந்து விட்டோம்.கொஞ்சம் அதிர்ச்சியில் இருந்த நான் வீடு வந்ததும் என் உறவுப் பெண்ணிடம் ஒம்போது என்றால் என்ன ஏன் அப்பிடிச் சொன்னே என்று கேட்க பொம்பளமாதிரி ஆம்பிள்ளைங்க நடந்து வந்தா அப்பிடி சொல்வாங்க என்றாள். அதற்கு மேலும் அவளுக்கும் தெரியவில்லை.

இது ஹார்மோனல் கோளாறு/உறுப்புக் கோளாறு என்பதும், இதனால் அவர்கள் எவ்வளவு மன உளைச்சல் அடைகிறார்கள் என்பதும் அடுத்தவர்களால் புரிந்துகொள்ள இயலாத விஷயம். ஆண் ஒருவர் உடலில் பெண் தன்மை உள்ள ஹார்மோன் ( எஸ்ட்ரோஜன் ) அதிகமாக சுரப்பது, அல்லது பிறக்கும்போது ஆண்& பெண் உறுப்புகள் சேர்ந்தே இருப்பது. அல்லது அந்தரங்க உறுப்புக்களே இன்மை ஆகியனவும் காரணமாகும்.

பதின்பருவத்தில் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ உணரும் அவர்கள் அதற்கேற்ப உடையணிய  மேக்கப் செய்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். மேலும் நிஜப்பெண்ணாக ஆக அவர்கள் அதற்கான அறுவை சிகிச்சை செய்து கொள்ள விழைகிறார்கள். தனிப்பட்ட முறையில் தங்களைப் போன்று மாறியவர்களிடமே தங்களின் அந்தரங்க உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துவந்தார்கள். தற்போது இந்தப் பாலின மாற்று அறுவை சிகிச்சை. அரசாங்கத்தின் உதவியுடன் அரசு மருத்துவமனைகளில் செய்யப்படுகிறது. இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்படுகிறது. 

பெண்களைப் போல மாறும் இவர்களின் குரல் மட்டும் பெண் குரலாக மாறாமல் இவர்களின் எதிரியாகி விடுகிறது. மற்றபடி இவர்களின் அழகுணர்ச்சியும் நளினமும் நாணமும் பெண்களே தோற்றுவிடும் அளவு இருக்கும். தங்களை சிரத்தையுடன் அழகுபடுத்திக்கொள்வார்கள். அரவான் திருவிழாவில் அழகிப் போட்டிகளும் நடக்கும். அதில் வரும் அழகிகளைப் பார்த்தால் நாமே அதிசயிப்போம்.

வட இந்தியாவில் இவர்கள் மதிக்கப்படுகிறாரகள். திருமணம் குழந்தைப்பேறு போன்ற நிகழ்வுகளில் இவர்களின் வருகையை அவர்கள் வரவேற்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இவர்களை ட்ரெயினிலோ வேறு எங்குமோ பார்த்தாலும் பணம் கேட்டார்கள் என்றால் கையில் இருப்பதைக் கொடுப்பேன். வாங்கித் தலையைச் சுற்றி வாயில் வைத்து பிரார்த்தனை செய்து ஆசீர்வதித்துச் செல்வார்கள்.

ஆனால் உறவினர்கள் சிலர் இவர்கள் ரொம்பத் தொந்தரவு செய்வதாகவும் தொட்டுத் தொட்டுக் காசு கேட்பதாகவும் ட்ரெயினில் உணவுண்ணும்சமயம் வந்து ஒரு முறை உணவைத் தரச்சொல்லிப் பிடிவாதம் பிடித்து வாங்கிச் சென்றதாகவும் கூறி வருந்தினர். இப்படிச்சிலர் செய்யும் செயலால் வேறுபல திருநங்கையரும் அவமானப் பட நேரும்.

ஒரு முறை கே கே நகரில் இருந்து லேடீஸ் ஸ்பெஷல் அலுவலகத்துக்கு ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தேன். 3 பேர் திருநங்கைகள் ஏறினார்கள் மிகச் சிறிய வயது. என் பக்கத்தில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அவர்கள் ஏறியதும் அருவறுத்த முகத்தோடு உடலைச்சுருக்கியது போல அமர்ந்து கொண்டார். அதைக்கண்டதும் அவர்கள் மூவருக்கும் கோபம் ஏற்பட்டது. அந்த ஷேர் ஆட்டோவில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த ஒரு பாடலை சேர்ந்து ஓங்கிக் குரலெடுத்துப் பாடியபடியே உடலை அசைக்கத் துவங்கினார்கள் அந்தத் திருநங்கைகள்.அவர்களோடு பயணம் செய்யப் பிடிக்காமல் பயந்த பக்கத்து சீட் பெண்மணி அடுத்த ஸ்டாப்பில் இறங்கி ஓடினார். அவரைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் பாட்டையும் அசைவையும் நிறுத்திய திருநங்கைகள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்கள். அவர்கள் அவமதிக்கப்படும்போது பொங்கி எழுகிறார்கள் பின்பு இயல்பாக இருக்கிறார்கள் என்பது புரிந்தது.

மகாபாரதத்தில் குருக்ஷேத்திரப் போரில் அரவானைப் பலிகொடுக்குமுதல்நாள் திருமணசுகம் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கும் அரவானின் ஆசைப்படி கிருஷ்ணர் பெண்ணாக மாறித் திருமணம் செய்துகொண்டு அன்று அவருக்கு மனைவியாக இருப்பார். இதேதான் விழுப்புரம் கூவாகம் திருவிழாவிலும் நடைபெறும். அரவானைத் தங்கள் கணவனாக வரிக்கும் அவர்கள் அரவானுக்குப் பதிலாக பூசாரியிடம் தாலி கட்டிக் கொள்வார்கள். மறுநாள் அரவான் பலியிடப்பட்டதும் தங்கள் தாலியறுத்து பூவும் பொட்டும் கலைத்து அழுது புலம்புவார்கள். ஒரு மாதம் கழித்துத் திரும்ப தாலி அணிந்து கொள்வார்கள் என்று கூறினார்கள். இந்த சமயங்களில் அங்கே ஆண்களும் இவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளக் கூடுகிறார்கள். இவர்களே தவிர்க்க விரும்பினாலும் அங்கே அந்த வேண்டாத சகவாசம் ஏற்பட்டு விடுகிறது.

ஒம்போது, அலி, அரவாணி, திருநங்கை, பேடி, பெட்டை என்று எல்லாம் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.  அர்த்தநாரீஸ்வரர் என்று சிவனும், மோகினி அவதாரத்தில் விஷ்ணுவும் இந்த இருபால் தன்மையுடையவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இதிகாசங்களில் சிகண்டி, பிருகன்னளை என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறார்கள். தான் காதலித்தவரைத் திருமணம் செய்யவிடாமல் கடத்தி வந்து தன் தம்பிகளுக்குத் தாரமாக்க முனைந்த பீஷ்மரை எதிர்த்த அம்பைதான் அடுத்த பிறவியில் சிகண்டியாகப் பிறந்து வந்து அவரை யுத்தத்தில் ( பெண்களுடன் போரிடமாட்டேன் என்று அவர் சபதம் இட்டிருப்பதால் ஆண் பெண் கலந்த ரூபத்தில் பிறந்த சிகண்டி ) பீஷ்மரை அம்பு எய்து கொன்றார். முகலாய அரண்மனைகளில் கூட அந்தப்புரக் காப்பாளர்களாக , ராஜா ராணிக்கு அந்தரங்க சேவகர்களாக இருந்திருக்கிறார்கள். அதிகாரத்தை நிர்ணயிக்கும் வலிமையான பதவிகளில் கூட இருந்திருக்கிறார்கள்.

திருமண காதல் வாழ்வு என்பது திருநங்கைகளுக்கு எட்டாக கனவாகவே இருக்கிறது. பால் மாற்ற சிகிச்சை செய்து கொண்டாலும் ஏதோ ஒரு ஆண் விரும்பி மணந்துகொண்டாலும் இவர்களுக்கு பிள்ளைப்பேறு இருக்காது என்று சொல்கிறார்கள்.வாரண்ட் பாலா என்பவர் இப்படி உள்ளவர்களை காவல்துறையில் பயிற்சி அளித்து மகளிர் காவல் நிலையங்களில் பொறுப்பில் வைக்கலாம் என்று கூறி இருக்கிறார். மேலும் இவர்கள் வாரிசு குடும்பம் என்று இல்லாததால் தொழிலுக்கு நேர்மையாகவும், கையாடல் போன்றவை செய்யாமலும் லஞ்சம் வாங்காமலும் இருப்பார்கள் என்கிறார்.

சமூக மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமல்ல ஒரு திருநங்கையைத் சகபாலராக அங்கீகரிப்பது தனி மனித உரிமையை அங்கீகரிக்கும் செயல். எல்லா மனிதர்களையும் போல தன்னுடைய சாதி மதம் பால் உரிமையை நிர்ணயம் செய்வது ஒவ்வொரு திருநங்கைக்குக்கும் நம்பிக்கும் உரிய உரிமையாகும் என ஏப்ரல் 15, 2014, கோர்ட் அறிவித்துள்ளது.

சமூகம் மற்றும் பொருளாதாரக் காரணங்களால் பிற்படுத்தப்பட்டவர்கள்  என்று கூறி கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் அரசுப் பணிகளிலும் ஏன் அரசாங்கத்தின் அங்கமாகவும் சலுகை வழங்கி பணியமர்த்தப்படவேண்டும் எனவும் கூறியுள்ளது.

மூன்றாம் பாலின சர்டிஃபிகேட். ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் எல்லாம் தமிழகத்தில் முந்திய அரசின் காலத்திலேயே வழங்கப்பட்டுள்ளது. அரவாணிகள் நல வாரியம் அமைத்து மூன்று மாதத்துக்கு ஒரு முறை குறைதீர் கூட்டங்கள் நடத்த ஆணையிடப்பட்டுள்ளது. நடக்கிறதேவெனத் தெரியவில்லை.

ஓட்டர் ஐடியும் வழங்கப்பட்டால் ஒரு மில்லியன் அளவில் இருக்கும் அவர்கள் ஓட்டளிக்கும் உரிமைபெற்று அரசை நிர்ணயிக்கும் சக்தியாக மாறுவார்கள். என்று முன்னாள் எலக்‌ஷன் கமிஷனர் சையத் குரைஷி கூறி இருக்கிறார். போன வருடம் இவர்களுக்கான வோட்டர் ஐடியும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவில் ஜேசி ரோட்டில் இருக்கும் ரவீந்திரா கலாக்ஷேத்திராவில் ஃபிப்ரவரி மாதம் 800 திருநங்கைகள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று பென்ஷன் கேட்டு நடந்தது. அதன்படி மைத்ரி திட்டம் மூலம் 40 வயதுக்கு மேல் இருக்கும் திருநங்கைகளுக்கு பெங்களூருவில் 500 ரூபாய் பென்ஷன் வழங்கப்படும் என்று (தமிழ்நாட்டில் 1000 ரூ. வழங்கப்படுகிறதாம்.).ரெவின்யூ மினிஸ்டர் வி ஸ்ரீனிவாஸ் ப்ரஸாத், சோஷியல் வெல்ஃபேர் மினிஸ்டர் ஹெச் ஆஞ்சநேயா, மற்றும் அர்பன் டெவலெப்மெண்ட் மினிஸ்டர் ராமலிங்க கவுடே கலந்து கொண்டு தெரிவித்தார்கள். தமிழகம் போலவே இங்கும் 1000 ரூபாய் வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் மாநில அரசாங்கம் அறிவித்துள்ள அன்னபாக்யா, யஷஸ்வினி, மற்றும் அக்ஷர்யா ஆகிய திட்டங்களும் அவர்களுக்காக வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் தகுதியும் திறமையும் வாய்ந்த திருநங்கைகள் அரசுப்பணிக்கு விண்ணப்பிக்குமாறும் வேலை ஏற்பாடு செய்துதரப்படும் என்றும் அமைச்சர் ப்ரசாத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்துக்கு வந்த திருநங்கைகளிலேயே இரண்டு குழுக்கள் இருந்தன. ஒன்று சங்கமா என்ற குழு, இன்னொன்று (KSMF), கர்நாடகா செக்ஸுவல் மைனாரிட்டி ஃபாரம், இது போக இன்னும் சில குழுக்களும் இருக்கின்றன. இவைகளுக்குள் யார் தலைமைதாங்கி இதை கோ ஆர்டினேட் செய்து எடுத்துச் செல்வது என்று ஒரே சச்சரவாகிவிட்டது.  

திருநங்கைகள் உரிமைக்காகப் போராடிவரும் கிரண் என்ற செயற்பாட்டளர், ( இவர் கர்நாடகா செக்ஸுவல் மைனாரிட்டி ஃபாரமில் உறுப்பினராகவும் இருக்கிறார் .) கூறும்போது அனைவரும் தனித்தனிக்குழுவாக இருந்து செயல்படாமல் கர்நாடக அரசின் கீழ் செயல்படும் செக்ஸுவல் மைனாரிட்டி ஃபார்மில் இணைந்து செயலாற்றினால் எல்லாத் திருநங்கைகளையும் ஒரே குழுவில் இணைக்க ஏதுவாக இருக்கும் என்றும், கர்நாடக மாநிலத்தில் இவர்களைப் போன்றோர் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று புள்ளிவிவரம் எடுக்கவும் என்ரோல் செய்யவும் மேலும் பென்ஷன் மற்ற வசதிகளை உடனடியாகப் பெற்றுத்தரவும் வழிவகுக்கும் என்றும் கூறுகிறார். 

பாலினம் ஒரு தடையல்ல என்று நிரூபித்தபடி ரோஸும், நட்ராஜும், கல்கியும் ஸ்மைலியும் தங்கள் துறையில் சாதித்து முகநூலிலும் கலக்கி வருகிறார்கள்.தங்களைக் கல்வியறிவிலும் தொழிற்துறை அறிவிலும் மேம்படுத்திக்கொண்டு தாங்கள் விரும்பிய துறையில் இவர்கள் ஈடுபட்டு தங்கள் குறைகளையும் மீறி ஜெயித்திருக்கிறார்கள். அதற்கு இவர்கள் குடும்பம் இவர்களுக்குப் பக்கபலமாக அமைந்தது போல் மற்ற திருநங்கைகளுக்கும் அமைந்தால் அவர்களும் தங்களை மீட்டெடுத்து சமூகத்தில் உயர்வாழ்வு பெறுவார்கள். சகபாலராக அவர்களை (சமூக பாதுகாப்பு, குடும்பப் பாதுகாப்பு சுயமரியாதை, சகமனித )அங்கீகாரம், அளித்து ஏற்றுக்கொண்டு மதிக்கும் மனது ஒவ்வொருவருக்கும் வாய்க்கப்பெற்றால் அவர்கள் வாழ்வு மிளிரும்
  http://honeylaksh.blogspot.in/2014/09/blog-post_23.html

கல்கி சுப்பிரமணியம்: தன்னை செதுக்கிய வெற்றி திருநங்கை!

கல்கி சுப்பிரமணியம்: தன்னை செதுக்கிய வெற்றி திருநங்கை!


கல்கி சுப்பிரமணியம், தன் மெல்லிய குரலில் என்னிடம் உற்சாகமாக தொலைப்பேசியில் பேச தொடங்கினார். நடிகர், எழுத்தாளர், திருநங்கை ஆர்வலர், தொழில்முனைவர் போன்ற பன்முகங்களை கொண்டவர் இவர்.
கல்கி எப்படிப்பட்டவர் என்பதற்கான சுருக்கமான விளக்கத்தை அவரிடம் கேட்டால், உடனே பதில் நமக்கு கிடைக்கிறது, "பெண்ணாக இருப்பதில் பெருமை அடையும் கல்கி, ஆண்- பெண் சமத்துவம், மற்றும் திருநங்கைகள் உரிமைகளுக்காக போராடும் ஆர்வலர் இவர். தற்போதைய நாகரீக பெண்களை போல நடந்துக்கொண்டாலும், மனதளவில் கிராமிய சிந்தனைகளோடு வாழ்ந்து வருபவர். ஒரு கலைஞராக இருப்பதோடு தொழில்முனைவராகவும் இருக்க விருப்பம் கொண்டவர், நல்ல கவிதாயினி, சுமாரான சமையல்காரர், எளிதில் கோபம் அடையக்கூடிய இளம் பெண். சில சமயம் ஞாபக மறதியில், தலையிலேயே மூக்கு கண்ணாடியை வைத்து, மற்ற இடங்களிலும் தேடிக்கொண்டு இருப்பவர்." என்று தன்னை பற்றி அழகாக அறிமுகப்படுத்தி கொண்டார் கல்கி.
ஆணாக பிறந்து, 16 வயதில் தான் யார் என்ற குழப்பத்திலிருந்து இன்று வரை, கல்கி பல சோதனைகளையும், சவால்களையும் கடந்து வந்திருக்கிறார் என்றே சொல்லலாம். இருப்பினும், தன்னுடைய சோதனைமிக்க நாட்களில், எல்லாம் நன்மைக்கே என்று அவர் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையும், நேர்மறை சிந்தனைகளும் கல்கியை இன்றுவரை பயணித்து கொண்டு வந்துள்ளது. "ஒரு ஆண், கதாநாயகியாக மாற முடியும் என்றால், இந்த உலகத்தில் அனைத்தும் சாத்தியமே. அதற்கு தேவை தன்னம்பிக்கை, தைரியம், மற்றும் தீர்க்கமான குறிக்கோள்." என்று எல்லோரிடமும் சாதாரணமாக கல்கி சொல்லுவதுண்டு.
திருநங்கையாக இருப்பதில் வெட்கம் கொண்ட பல பேருக்கு மத்தியில், தன்னை திருநங்கை என்று தைரியமாக அடையாள படுத்திக்கொண்டது மட்டுமல்லாமல், அவ்வாறு இருப்பதில் வெட்கப்பட தேவையில்லை என்றும் விளக்கினார். இதுவே அவருக்கு பெரிய சவாலாகவும் அமைந்தது. "மற்றவர்களை போல, எங்களை போன்றவர்களாலும், இந்த சமூகத்திற்கு பல வழியில் உதவியாக இருக்க முடியும்." என்கிறார் கல்கி.
இன்று இவர் அடைந்திருக்கும் இடத்திற்கு வந்த பாதையில் நிறைய தடைகளும், கஷ்டங்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 16 வயதில் தன்னுடைய உடலளவில் இருந்த அடையாளத்திற்கும், மனதளவில் இருந்த வேறொரு அடையாளத்திற்கும் இடையே கல்கி போராடியது தான் அவருடைய முதல் மற்றும் பெரிய பிரச்னையாகவும் கருதுகிறார். தன்னுடைய உண்மையான அடையாளத்தை கண்டறிவதில் இருந்த சிரமத்தை பகிர்ந்துக்கொள்ளும் போது, "பள்ளியில், பெண் தன்மையுடன் இருந்த ஆணாக குழம்பிய நிலையில் இருந்தேன். அது தான் என்னுடைய கடுமையான காலம்." என்று கூறுகிறார் கல்கி.
தன்னுடைய வாழ்நாள் முழுவதும், இத்தகைய குழப்பத்தோடு இருக்க முடியாது என்று சிறுவனாக இருந்த போதே உணர்ந்து கொண்டார் கல்கி. தன்னுடைய உடலிற்கும், மனதிற்கும் இடையே ஒரு பெரிய வேறுபாடு இருப்பதை உணர்ந்து சற்று அதிர்ந்தும் போயிருந்தார். குடும்பத்தார் , இந்த நிலையில் தன்னையும் தன் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகமும், குழப்பமும் பல முறை இவரை தற்கொலை முயற்சி எண்ணத்தில் ஆழ்த்தியுள்ளது என்கிறார். இருந்தாலும், அது போல் செய்யாமல், திடமாக முடிவெடுத்து தன்னுடைய உண்மையான பாலினத்தை பற்றியும் தான் உணர்ந்ததையும் குடும்பத்தாரிடம் தைரியத்தை வரவழைத்து கொண்டு சொன்னார். "நான் சொன்னதை கேட்டதும், என் பெற்றோர்கள் உடைந்தே போனார்கள். அவர்கள் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்க என்னால் முடியவில்லை. என்னை அப்படியே ஏற்றுக்கொண்டால், அவர்களை பெருமையாக்குவேன் என்று சத்தியமும் செய்தேன். அதன் படி, எனக்கு அவர்கள் வாய்ப்பும் அளித்தார்கள். அதற்காக கடினமாக உழைத்து என் சத்தியத்தை நிறைவேற்றியுள்ளேன் என நினைக்கையில் சந்தோஷம் அடைகிறேன்" என்கிறார்.
கல்கி அடைந்த வளர்ச்சியின் பட்டியல் சற்று நீளமானது. ஒரு நண்பரின் மூலம் தொழிலில் முதல் அடி வைப்பதற்கு கல்கிக்கு வாய்ப்பமைந்தது. அந்த இளம் கலைஞர், தன்னுடைய இசை வாத்தியங்களையும், கலையையும் தொழில் மூலம் சந்தைபடுத்த அவரிடம் உதவி கேட்டார். ஒரு சிறு உதவியாக தன்னுடைய சிறு முதலீட்டை செய்த கல்கி, அந்த இளைஞருடன் இணையம் மூலம் அப்பொருட்களை விற்பனை செய்ய தொடங்கினார். "பிராண்ட் கல்கி நிறுவனம்" (Brand Kalki Enterprises) பிறந்தது அப்போதுதான். "இந்த தொழில் மூலம் நன்றாக சம்பாதித்தது மட்டுமல்லாமல், எனக்கு லாபமும் கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை தந்தது. தற்போது, என்னுடைய நண்பரும் சொந்தமாக இந்த தொழிலை தனியாக எடுத்து பல நாடுகளில் நடத்தி வருகிறார்."
அதுமட்டுமல்லாமல், "கல்கி ஆர்கானிக்" (Kalki Organic) என்ற நிறுவனத்தையும் தொடங்கி, ரசாயனங்கள் கலக்காத இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட சுத்தமான சோப்பு, மற்றும் அன்றாடத்திற்கு தேவையான சுகாதார பொருட்களை விற்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கவிருக்கிறார்.
இது தவிர, கல்கி கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திருநங்கைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய சமத்துவத்தை பற்றி எழுதி வருகிறார். கவிதைகளின் மீது காதல் கொண்ட கல்கி தன் முதல் தமிழ் கவிதை தொகுப்பான 'குறிஅறுத்தேன்" புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதை பற்றி கல்கி கூறுகையில்,
"எனது கவிதைகள், என்னைப் போன்ற பெண் அல்லாத பெண்களுடைய பயணத்தை பற்றி துல்லியமாக விளக்கும். என்னுடைய முதல் இலக்கியமே எனக்கு ஒரு பெயரை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல், எனக்கு எழுத்தாளர் என்ற ஒரு அங்கீகாரத்தையும் தந்துள்ளது. தற்போது, என்னுடைய இரண்டாவது தமிழ் புத்தகம் மற்றும் ஆங்கில புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்துகிறேன்."
கௌரவமான வாழ்க்கை, சமூகத்தில் ஒரு அங்கம், அடிப்படை வாழ்வாதாரம் இதற்காக மட்டுமே நம் நாட்டில் திருநங்கைகள் போராடிய வண்ணம் இருக்கின்றனர். "எங்களில் பல பேர், தங்களுடைய சொந்த குடும்பங்களை விட்டே துரத்தப்படுகின்றனர். தவிர போதிய கல்வி இல்லாமை, நல்ல இருப்பிடம், மருத்துவ வசதிகள் என்று எந்தவொரு பிடிப்பும் இல்லாமல், எப்படி வாழ்வது என்று தெரியாமல் பாதுகாப்பற்ற ஒரு எதிர்காலத்தோடு வாழ்ந்து வருகிறோம்." என்கிறார் கல்கி. இதற்காக, இந்தியாவில் சட்டப்பூர்வமாக திருநங்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுவருகிறார். சட்டத்திற்கு தங்களுடைய உரிமைகளை எடுத்து விளக்குவது, கல்வி துறையில் எந்தவொரு பேதமும் இன்றி சமமாக கல்வி அளிக்க வேண்டும் என்ற முழக்கம், இதனால் ஒரு ஆரோக்கியமான கல்வி சூழலை உருவாக்கி தருவது போன்ற பல சமூக அக்கறையுடன் திருநங்கைகளுக்காக கல்கி போராடி வருவது குறிப்பிடத்தக்கது. சமூகத்திலும், சட்டத்திலும், பொருளாதாரத்திலும் ஒரு முக்கிய உரிமையை இவர்களுக்கு அளிக்க முனைப்புடன் செயல்படும் "சஹோதரி" ஃபவுண்டேஷனுடன் இணைந்திருக்கிறார் கல்கி. "சஹோதரியின் மூலம் திருநங்கைகளுடைய வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வர வேண்டும்." என்று தன்னுடைய முயற்சிகளை பற்றி விவரிக்கிறார் கல்கி.
தன்மேல் இருக்கும் நம்பிக்கையையும், சுயமரியாதையையும் ஒரு உத்வேகமாக எடுத்துக்கொண்டிருக்கும் கல்கி, "நான் கொஞ்சம் வித்தியாசமானவள் தான், இருந்தாலும் எல்லோரிடம் இருக்கும் நல்ல குணங்கள் என்னிடமும் உண்டு. அந்த நல்ல விஷயங்களை இன்னும் சிறப்பாக மாற்றிக்கொள்ள தான் நான் முயற்சித்தி வருகிறேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதேனும் ஒரு விஷயத்தை கற்றுத்தர வாழ்க்கை தவறுவதில்லை." எங்கிறார். திருநங்கைகளுக்காக கல்கி எடுத்து வைத்த அடுத்த அடி, 2009ம் ஆண்டில் இவர் வடிவமைத்த திருநங்கைகளுக்கான திருமண இணையத்தளம். தவிர, 2011ம் ஆண்டில் 'நர்த்தகி' என்ற தமிழ் படத்தில் முன்னணி கதாபாத்திரமாக நடித்தார். திருநங்கைகள் சமூகத்தை பற்றி அழகாக விளக்கிய இந்த படத்தின் மூலம், கல்கிக்கு விமர்சகர்கள் மற்றும் உலகளாவிய மக்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தது.
இவருடைய வெற்றி பாதையில் குடும்பத்தினரும் நண்பர்களும் பெரும் பங்கு வகிகின்றனர், இவருக்கு வந்த கஷ்டங்களை தாண்டி இருந்த தைரியம் தான் கல்கியை முன்நோக்கிச் செல்ல உறுதுணையாக இருந்தது. "ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தைரியமாக எழுந்து, அந்த கஷ்டமான சூழலை மாற்ற முயற்சிக்க வேண்டும். விரக்தி என்பது தோல்வியால் வரக்கூடிய விஷயம் அல்ல. சூழலை எதிர்க்கொள்ளாத பயத்தின் விளைவு தான் விரக்தி. எனக்கு, என்னுடைய குடும்பத்தினருடைய அன்பும், அரவணைப்பும் தான் மிகப்பெரிய பலம். என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயமும் கூட."
கல்கிக்கு இருக்கும் இந்த அசாதாரண தைரியம் புத்தகங்கள் மூலமாகவே வந்தது. "எனக்குள் உருவாகியுள்ள தைரியம், நான் தேர்ந்தெடுத்து படித்த புத்தகங்களால் உண்டானது. என்னுடைய வாழ்க்கையை நான் படித்த புத்தகங்களிலிருந்து கிடைத்த அறிவு மூலம் வடிவமைத்துக்கொண்டேன்." என்று பகிர்ந்துக்கொள்கிறார் கல்கி.
'விதியைஎழுதினேன்' என்ற இவரின் கவிதைத்தொகுப்பு, திருச்சி பிஷப் ஹெப்பர் கல்லூரியில் (Bishop Heber College) பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. அவரின் வெற்றி பயணத்தை பாராட்டியபோது, "நான் ஆசிர்வதிக்கப்பட்டவள். இன்று நான் நானாக இருப்பது ஒரு ஆசிர்வாதமே." என்கிறார் கல்கி தன்னடக்கத்துடன்.

http://tamil.yourstory.com/read/d92780ae68/kalki-subramaniam-carved-itself-transgender-win-

அரசு வேலையை பெற்ற முதல் திருநங்கை #குணவதி


Wednesday, July 17, 2013

பொட்டை!

பொட்டை
நேற்று மாலை பெருநகர ரயில் வண்டியில் ஒரு திரைப்படம் பார்த்து விட்டு நானும், அம்மாவும் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். தீடீரென ஒரு கைத்தட்டல் ஒலி.. நிமிர்ந்து பார்த்தால் ஒரு திருநங்கை கைத்தட்டியவாறு நின்று கொண்டிருந்தாள். பின்னர், சீட்டில் சரிந்து நின்றவாறு தனக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு முப்பத்தைந்து வயதிருக்கலாம் அல்லது வயதுக்கு மீறிய மூப்பாக இருக்கலாம். அழுக்குப் பிடித்த சேலை… அவலட்சணமான முகம்… நெற்றியில் விழும் ஒழுங்கற்ற சிகை… உண்மையைச் சொன்னால், பரிதாபமாகவும், அதே வேளை அசூயையாகவும் இருந்தது.
ரயில் கடகடத்துக் கொண்டிருந்தது. வேறெங்கோ தலை திருப்பி நின்றிருந்த அத்திருநங்கை சட்டென திரும்பினாள். கண்களில் கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. ஒரு கணம் நான் அதிர்ச்சியடைந்தேன். அவள் எதை நினைத்துக் கலங்கக் கூடும்? பிச்சையெடுத்து வாழ நேர்ந்த அவலம் குறித்தா? பிறவியில் நேர்ந்த ஊனம் குறித்தா? இனி ஒருபோதும் திரும்பிச் செல்ல முடியாத குடும்பத்தினரின் நினைவு குறித்தா? அந்தக் கண்ணீரில்… ஒரு கணம் பீதியூட்டும் அவளது முகத்தில்… சுயபச்சாதாபமும், சீரழிவும் கூடி நின்றன. நான் ஜன்னலுக்கு வெளியே பார்க்கத் தொடங்கினேன்.
மறுபடியும் கைத்தட்டல்… அவள் இப்பொழுது கையேந்தியவாறு முன்நகரத் தொடங்கினாள். பலரும் அவளை ஏறிட்டுப் பார்க்காமலிருக்க பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். நான் ஒரு ஐந்து ரூபாயை அவளது விரல்கள் பட்டு விடக் கூடாதென்ற எச்சரிக்கையோடு அவள் கையில் போட்டேன். எனது இருக்கையிலிருந்து இரு இருக்கைகள் தள்ளி, தனது குடும்பத்தினரோடு இருந்த ஒருவன் சிரித்தவாறு, தீடீரென அவளைப் போலவே கைதட்டினான். அவனது குடும்பப் பெண்கள் சிரிக்கத் தொடங்கினார்கள். திருநங்கை திரும்பிப் பார்த்தாள். நேரே அவனிடம் சென்று ஏதோ காரசாரமாக சொன்னவாறு அவனது முகத்துக்கு நேராக கைதட்டினாள். அவன் பதிலுக்கு ஏதோ ஏளனமாக சொன்னான். மயிலாப்பூர் ஸ்டேஷன் நெருங்கியது.
அவனைப் பார்த்து ஏதோ வசைபாடியவாறு வாசலை நோக்கி விரைந்தாள். சிரித்து கெக்கலி காட்டி கொண்டிருந்த அவனது முகம் இருளத் தொடங்கியது. “இதுக்கு மேல ஏதாவது பேசுன, அடிதான்!” என விரல் காட்டி எச்சரித்தான். என்னை கடந்து சென்ற திருநங்கை, வாசலருகே நின்று சற்று உரக்கவே சொன்னாள். “போடா பொட்டை!” கோபம் கொப்பளிக்க அவன் வாசலை நோக்கி விரைந்தான். நான் தலை திருப்பிப் பார்த்தேன். கண்ணிமைக்கும் பொழுதில் அவன், அத்திருநங்கையை தாக்கி ரயிலிருந்து பிளாட்பாரத்தில் தள்ளினான். விருட்டெனத் திரும்பி தனது இருக்கையை நோக்கி விரைந்தான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு வன்முறை நடந்து முடிந்து விட்டிருந்தது. “ஏய், ஹலோ, இது என்ன? அவளை ஏன் அடித்தீர்கள்? உங்களால் பிச்சை போட முடியாதென்றால், சும்மா இருக்க வேண்டியதுதானே, எதற்காக கேலி செய்கிறீர்கள்?” என இருக்கையிலிருந்து எழுந்து கத்தினேன். அவன் இந்த எதிர்ப்பை எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீ உட்கார், அவள் தண்ணியடித்திருக்கிறாள்” என்றவாறு சங்கடத்தோடு இருக்கையில் நெளியத் துவங்கினான். எனது அம்மா என்னை “உட்கார், உட்கார்” என கைகாட்டிக் கொண்டிருந்தாள். அதற்குள் உள்ளே வந்த திருநங்கை கோபத்தோடு அவனை நோக்கிக் கத்தத் துவங்கினாள். என்னிடம் தனது சிராய்த்த முழங்கையைக் காட்டி முறையிட்டாள். நான் கோபத்தில் என்ன செய்வதென்று புரியாமல் நின்று கொண்டிருந்தேன். “நீ முதலில் இங்கிருந்து போம்மா, இல்லையென்றால் நீ மேலும்தான் அடிபடுவாய்!” என்றேன். அவள் அங்கிருந்து நகர்ந்தாள். நான் இருக்கையில் அமர்ந்தேன். என்னை முறைத்துப் பார்த்த அவன், ஜன்னல் பக்கம் தலையை திருப்பிக் கொண்டான்.அவனது குடும்பப் பெண்கள் இப்பொழுது சிரிக்கவில்லை.
ரயில் நிலையத்தை நெருங்கியது. அம்மா என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். எல்லோரும் எதுவுமே நடவாதது போல அமைதியாக இருந்தார்கள். அந்த அமைதியை விடவும் அவள் அசிங்கமானவளில்லை எனத் தோன்றியது.
பி.கு: நேற்றிலிருந்து வித்யாவின் எழுத்துக்கள் நினைவில் எழும்பிக் கொண்டிருக்கின்றன.
நன்றி : போராட்டம்

http://www.vinavu.com/2009/06/15/apathy/

திருநங்கைகள் ஆனாலும் எங்களாலும் நல்லது செய்ய முடியும்

Friday, January 11, 2013

திருநங்கைகள் ஆனாலும் எங்களாலும் நல்லது செய்ய முடியும் ~ஈரநெஞ்சம்


கோவை காந்திமாநகர் பகுதியில் வயதான ஒரு பெரியவர் (கந்தசாமி) தெருவில் ஆதரவற்று இருந்ததைக் கண்ட திருநங்கைகள் ப்ரியா மற்றும் வைஷ்ணவி 09.01.2013 அன்ற...ு எங்கள் அமைப்பிற்குத் தகவல் கொடுத்தனர். எங்கள் அமைப்பு அவரை, கோவை B6 காவல் துறையின் அனுமதி பெற்று, கோவை சாய் ஆதரவற்றோர் காப்பகத்தில் அந்த திருநங்கைகள்
மூலமாகவே சேர்த்துள்ளது.
மேலும் ஒதுக்கப்பட்ட இனம் என்று யாரும் இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் ஈரநெஞ்சம் செயல்பாடுகளைக் கண்டு தாங்களாலும் சமூக பணியில் ஈடுபட முடியும், என்று தங்களை ஈடுபடுத்திக்கொண்ட திருநங்கைகள் ப்ரியா மற்றும் வைஷ்ணவி இருவரையும் ஈரநெஞ்சம் மனதார பாராட்டுகிறது.
~ நன்றி 129/2013
(ஈர நெஞ்சம்)
https://www.facebook.com/eeranenjam


http://eerammagi.blogspot.in/2013/01/blog-post_11.html