Tuesday, November 10, 2015

திருநங்கைகளும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளும் - பிரசாந்த்

Sunday, August 2, 2015

திருநங்கைகளா? யாரிவர்கள்?  எப்படி எங்கிருந்து பிறந்தார்கள்..? மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து ஆண்,பெண் என இரு உயிர்கள்தானே இருந்துவந்தது. இடையில் எங்கிருந்து வந்தார்கள் இவர்கள்? சிவனே ஆணும் பெண்ணுமாய் கலந்து அர்த்தநாதீஸ்வரராக  அவதாரம் பூண்டார் என சாஸ்திரங்கள் கூறுகிறது.

இவர்கள் பிறப்பிலேயே திருநங்கைகளாக பிறப்பதில்லை. அவர்கள் வளரும்போதுதான் வளர்கிறது இந்த பிரச்சினையும்.. இதற்கு அவர்களின் பருவ நேரத்தில் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றமே காரணம். குறிப்பாக ஆண்களுக்கு, பெண்களின் ஹார்மோன்கள் அதிகமாக சுரப்பதும், பெண்களுக்கு, ஆண்களின் ஹார்மோன்கள் அதிகமாக சுரப்பதுமே தான் மூலக்காரணம். பருவகாலங்களில் இந்த மாற்றத்தில் பாவிக்கப்பட்டவர்களின் பாவனைகளை கண்கூடாக கவனிக்கலாம்.


சரி, இனி இவர்களின் பிரச்சினைகளை பார்ப்போம். பள்ளிப்பருவத்திலேயே இவர்கள் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறார்கள். பாலியல் துன்புறுத்தலுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். இப்படி, உள்ளத்தின் ரீதியாகவும், உடலின் ரீதியாகவும் பல பிரச்சனைகளை எதிர்கொள்ளத்துணிவில்லாமல் கடைசியில் உயிரை விடத்துணிகிறார்கள். பெண்களுக்கே பாதுகாப்பில்லாத இச்சமூகத்தில் ஒரு திருநங்கை வாழ்வது அவ்வளவு சுலபமா? மாற்றத்திறனாளிகளை விட போற்றிப்பாதுகாக்கப்படவேண்டியவர்கள் இவர்கள்தான். ஏனென்றால் உடலால்மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் மாற்றத்தினாளிகள், ஆனால் திருநங்கைகள் உள்ளத்தாலும் பாத்க்கப்பட்டவர்கள். பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, வீட்டில் பெற்றோர்களால் துரத்தப்பட்டு, நிம்மதியிழந்து, நித்திரையிழந்து பாதுகாப்பு தேடி அலையும் அரவாணிகள் ஆயிரம். பண நெருக்கடிக்காக பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்கள். சிலர் பிச்சையெடுக்கும் அவலமும் அரங்கேறுகிறது. அதைக்காணும் நமக்கு சாதரணமாகவும், கேலியாகவும் மட்டும் தெரியுமே தவிர, அச்சுமைகளை சுமக்கும் வலி அவர்களுக்கு மட்டுமே புரியும். எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட அரவாணிகளுக்கு அவர்கள் மட்டுமே அரவணைப்பு.


உண்மையான அன்பையும் ஆதரவையும் தேடும் இவர்களுக்கு, அந்த அன்பும் ஆதரவும் கிடைக்கப்பெற்றால் பன்மடங்கு பாசமிக்கவர்களாய் விளங்குவார்கள். இவர்களால் குழந்தைகள் பெற்றக்கொள்ள முடியாதே தவிர, ஒரு தாய்க்கு ஈடான பாச்தைக்கொடுக்கமுடியும். அவர்களுக்கும் காதல்,காமம்,ஆசை,கோபம்,கனவு,லட்சியம் என உணர்வுகள் உண்டு என்பதை நாம் உணரந்துகொள்ளவேண்டும். அவர்களை ஒருபோதும் ஒதுக்கிவிடக்கூடாது. மற்ற நாடுகளைவிட, இந்தியாவில்தான் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் ஏராளம். நம்மைப்போன்ற அதிசயப்பிறவிகளால் கிண்டலும் கேலியும் தாராளம். இனியாவது திருந்தப்பார்ப்போம் தீர்க்கப்பிறவிகளே...! அவர்களுக்கான தீர்வு இட ஒதுக்கீட்டுடன் ஒதுங்கிவிடுவதல்ல. அவர்கள் குரலும் சமூகத்தில் ஓங்கி ஒலிக்கவேண்டும் என்பதே.


பள்ளிக்கூடத்திலே இவர்கள் ஒதுக்கப்படாதவாறு, சக மாணவர்களுக்கு இதைப்பற்றி அறிவியல் ரீதியாக தெளிவான புரிதலைக் கொண்டுவரவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் கேலி கிண்டலுக்குள்ளாவதை, ஒரு நல்ல புரிதலின் அடிப்படையில் ஆரம்பத்திலேயே தடுக்க முடியும். மற்றும் சமூகத்தில் ஒரு நிலையான அங்கீகாரம் கிடைக்கவேண்டுமானால் அவர்கள் அரசியலுக்குள் நுழைந்தால் மட்டுமே இது சாத்தியம். நாம் அவர்களுக்கு வாக்களிக்கத் தயங்கக்கூடாது. பெண்களுக்கு சாதகமான அனைத்து சட்டங்களும் இவர்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில் சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கெதிரான குற்றங்கள் குறையும். இப்பொழுது அவர்களும் பெரிய பெரிய பதவிகளில் வலம் வரத்தொடங்கிவிட்டார்கள்.


"வெல்லட்டும் திருநங்கைகள் இன்று... ஊர் சொல்லட்டும் வீரமங்கைகள் என்று...!" அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..! என்றும் தமிழ்த்தாயின் மடியில், இரா.பிரசாந்த்.
http://prashanth8680.blogspot.in/

No comments:

Post a Comment