நான் இந்தியாவின் முதற் திருநங்கை பொறியியல் கல்லூரி மாணவி என்பது
அனைவருக்கும் தெரியும்.நான் இப்பொழுது மூன்றாம் ஆண்டு பயிலுகிறேன் இந்த
ஆண்டு எனக்கு கிடைத்த ஒரு அனுபவம் .தமிழ்நாடு காகிததாள் நிறுவனம் கரூரில்
உள்ளது இந்நிறுவனம் இந்த வருடம் மாநில அளவில் "டெனிகாயிட் " ஆட்டத்தை
நடத்தியது இதில் எங்கள் கல்லூரி சார்பாக நானும் கலந்து கொண்டேன்.மிகவும்
மகிழ்ச்சியான தருணம் அது இரண்டு நாட்கள் நடைபெற்றது.விளையாட்டுதுறையில்
சாதித்த பல வீரர்களை சந்திக்கும் வாய்ப்பு
கிட்டியது. ஆனால் பயிற்சி சரியாக எடுக்காததால் நான் ஜெயிக்கவில்லை. மிக
அருமையான அனுபவம் எனக்கு கிடைத்தது. தொலைக்காட்சியில் விளையாட்டுதுறையில்
சாதித்த வீரர்களை காணும்பொழுது பலமுறை எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது
உண்டு.நமது சமூகத்தில் இது போன்று விளையாட்டுதுறையில் சாதிக்க மாட்டார்களா
என்று நினைத்ததுண்டு. ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததை எண்ணி மிகுந்த
மகிழ்ச்சியடைந்தேன். இந்த மாபெரும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தி கொடுத்த என்
கல்லூரி நிர்வாகத்திற்கும் ,உடற்கல்வி பேராசிரியர் அவர்களுக்கும் என்
சிரம் தாழ்ந்த நன்றியினை சமர்பிக்கிறேன்.ஆனால் இந்திய அரசு
விளையாட்டுதுறையில் ஒரு பெண்ணுக்கு ஆண்தன்மை அதிகம் இருந்தால் அவர்களின்
பதக்கத்தை பிடி
ங்கி
விடுகிறது இது ஏன்?இந்திய அரசே!! விளையாட்டுத்துறை சட்டத்தில் ஹார்மோன்
பரிசோதனை செய்யும் சட்டத்தை நீக்கு!!!எங்கள் திறமைகளுக்கு மதிப்பளி!!!
...மதிப்பிற்குரிய மங்கை பானு
No comments:
Post a Comment