Tuesday, November 10, 2015

‘எதிரொலிக்கும் கரவொலிகள், அரவாணிகளும் மனிதர்களே’ நூல் வெளியீட்டு விழா

Published: 07 February 2010

பேராசிரியர் அ. மங்கை எழுதிய ‘எதிரொலிக்கும் கரவொலிகள், அரவாணிகளும் மனிதர்களே’ நூலை கண்ணாடி கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ப்ரியா பாபு வெளியிட பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன் பெற்றுக் கொண்டார். பத்மாவதி விவேகானந்தன் பேசுகையில், “ஆணின் கருத்தியல் சார்ந்த விவரிப்புகளால் பெண்கள் போலவும் அதைவிட மோசமாகவும் பாதிக்கப்படுபவர்கள் அரவாணிகள். அவர்களின் துயரநிலை மாறிவரும் சூழல் உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கது. அரவாணிகளோடு இணைந்து செயலாற்றும் பாங்கு தொடரவும், விளிம்பு நிலையில் வாழ்பவர்களை அரவணைக்கும் தன்மையை வளர்க்கவும் உழைப்போம்” என்றார். ப்ரியா பாபு, “எங்களை மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்க கேட்கவில்லை; பெண்களாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் கேட்கிறோம்” என்றார். நூலாசிரியர் அ. மங்கை தனது ஏற்புரையில், “இந்நூல் அரவாணிகள் சமூகத்தின் மத்தியில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதோ என்கிற தவிப்பில் இருக்கிறேன். பாலியல் பிரச்சினை பற்றிப் பேசத் தயங்கும் சமூகம் மாற வேண்டும். அதற்காக நம்மை நாமே பரிசீலித்துக் கொள்ளவேண்டும்” என்றார்.

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3255-2010-02-07-11-45-25

No comments:

Post a Comment