Monday, November 9, 2015

Are you BASTARD (Director) Gautham..? --- லிவிங்ஸ்மைல் வித்யா

 செப்டம்பர் 24, 2006
 

Are you BASTARD (Director) Gautham..?
எனக்கு விவரம் தெரிந்து சினிமா பார்க்க தொடங்கிய நாளிலிருந்து திருநங்கைகள் (அலிகளை) தொடர்ந்து சினிமாவில் கேவலப்பட்டு வருவதை நான் அறிவேன். இதனை தங்களின் தார்மீக உரிமையாகவே சினிமா பொறுக்கிகள் செய்து வருகின்றனர். (அந்த விதத்தில் "பம்பாய்" இயக்குநர் மணிரத்தினம் பாராட்டப் படவேண்டியவர்). திருப்பாச்சிக்கு பிறகு அலிகளைக் கேவலப்படுத்துவதை தமிழ் சினிமா கொஞ்சம் போல நிறுத்தி வைத்திருந்தது. சில மாதங்களுக்கு முன் வந்த "சித்திரம் பேசுதடி" படத்தில் கூட ஒரு காட்சியில் திருநங்கை ஒருவரை சற்று கண்ணியாமான முறையில் பாஸிட்டிவாக காட்டப்பட்டிருந்தார். மிக மகிழ்ந்தேன்..


சமீபத்தில் கௌதம் இயக்கத்தில், கமல், ஜோதிகா நடிப்பில் வெளிவந்து 25 நாட்களைத் தாண்டி தியேட்டரில் அடித்து உடைத்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் "அவுத்துப் போடு ஆட்டம் போடு" என்ற படத்தை இன்று (24/09/2006) மதியம் பார்த்தேன். தமிழ் சினிமாவில் அலிகளைக் கேவலப்படுத்துவதில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் சீரிய பணியை இப்படத்தின் இயக்குநர் திரு.கௌதம் அவர்கள் செவ்வனே செய்துள்ளார்.

படத்தில் வரும் ஒரு காட்சி...

கதைப்படி அந்த போலிஸ் ஸ்டேசனுக்கு ஒரு அலி வாரம் தவறாமல் தன் காம வெறியை அடக்கிக் கொள்ள வருவார். அவருக்கு உதவுவது, அந்த ஸ்டேசன் இன்ஸ்பெக்டரின் வாராந்திரக் கடமைகளில் ஒன்று. அதன்படி, அந்த வாரம் வருகை தரும் அலிக்கு லட்டாக அமைக்கின்றனர் கைதிகளான இரண்டு கல்லூரி மாணவர்கள். அவர்கள் இருவரும் அந்த அலியைப் பார்த்து அலற, அந்த அலியோ "அய்!, இந்த பக்கம் சிகப்பு, இந்த பக்கம் கருப்பு" என்று முத்தான ஒரு வசனம் சொல்லி, இருவரையும் வண்புணர்வுக்கு கட்டாயப்படுத்தி காரியம் முடிக்கிறார். குளோசப்பில் இரு கைதிகளும் அலறுவதாக காட்சி முடிகிறது.


வேறொரு காட்சியில் அந்த இன்ஸ்பெக்டரை விசாரிக்கும் உயர் அதிகாரி கமலஹாசன், கைதிகளை குறித்து எந்த குறிப்பும் எடுத்துக் கொள்ளவில்லை என்று மட்டும் தான் கடிந்துகொள்கிறார். (அலியைக் கூட்டிட்டு வந்து.. அந்த கசமுசா-வெல்லாம்.. மூச்! அதப்பத்தி ஒரு வார்த்தை இல்லையே!...)

நல்லது!! வேறொரு காட்சியில் இது குறித்து கொலைவெறியோடு பேசும், பாதிக்கப்பட்ட(?!) கைதிகளில் ஒருவர் "கோத்தா, ... அந்த அலிய.. எல்லாம் கொல்லனும்னு நினைச்சேன்...." என்பதாக ஒரு வசனம் வேறு!!....


போதாதென்று படத்தில் கதாநாயகன் வீர பராக்கிரமத்தோடு அறிமுகமாகும் காட்சியில் கமல், வில்லன் ஒருவரின் ஆண்மையை கேள்விக்குள்ளாக்க ...அப்பிடில்லைனா.. நீ பொட்டை என்று சொல்லுவார். படத்தில் பெரும்பான்மை காட்சிகளில் இந்த சொல்லாடல் முக்கியாம்சாமாக கையாளப்பட்டிருக்கும். இவற்றோடு ..த்தா, fukking எல்லாமே சரளமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

**************

குடும்பத்தாலும், ஒட்டு மொத்த சமூகத்தாலும் பொது வாழ்க்கையிலிருந்து புறக்கணிக்கப்பட்டு, சம் அங்கீகாரமின்றி, வாழ வழியில்லாமல் (சோத்துக்கு வழியில்லாமல் என்று புரிந்து கொள்ளவும்) கடைக்கோடியில் நின்று பிச்சையெடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழ நிர்பந்திக்கப்பட்ட-சொந்த நாட்டில் அகதிகளாக நிர்பந்திக்கப்பட்ட-திருநங்கைகளின் வாழ்க்கை முறை என்ன..? அவர்களின் பிரச்சனை என்ன..? என்பது குறித்து எந்தவொரு அக்கறையும் இன்றி, சட்டாம் பிள்ளைத்தனமாக பொதுப் புத்தியோடு இது போன்ற திமிர் பிடித்த வேலையை தமிழ் சினிமா தொடர்ந்து செய்து வருகிறது.

மாதத்திற்கு ஒரு காதலி, வேளைக்கொரு பெண் என்று வாழும் பணம் புடுங்கி, சினிமா பொருக்கிகளுக்கு, சமூகம் குறித்த அக்கறையோ, அடிப்படை மனிதாபிமானமோ தேவையில்லை. கண்ணை மூடிக் கொண்டு கலையைக் கற்றுக் கொண்டு, அக்கலையை விற்று காசு பார்க்கும் கலை-விபச்சாரகர்களை பொருத்தவரை, அலிகள் சோத்துக்கு சிங்கியடித்தே சாகவேண்டும். அதை விட்டுவிட்டு, விபச்சாரம் செய்து பிச்சையெடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழ்ந்தால், அவர்களை பொருத்தவரை அலிகள் மனம் பிரள்ந்தவர்கள்; சைக்கோ; கிரிமினல்கள்; அருவெருப்பானவர்கள் என்று தோன்றுவதில் வியப்பெதும் இல்லைதான்.

******************

இலக்கிய பரிச்சியம், உலகத் தர சினிமா என்று யோசிக்கும் கமல் போன்ற சிறந்த நடிகர்கள் கூட இத்தகைய காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்காதது தான் ஆச்சர்யம்.


இத்தகைய மனிதாபிமானமற்ற செயலைக் குறித்து சென்ஸார் போர்டுக்கொ, மற்ற மனித உரிமை இயக்கங்களுக்கோ எந்த புகாரும் இல்லை.. அவர்கள் மனிதர்களுக்காக மட்டும் தான் போராடுவார்களாமே அப்பிடியா!?

இப்படத்தின் மீதும் பொது நல வழக்கொன்று போட திட்டமிட்டுள்ளேன். குறைந்து அக்காட்சிகளை நீக்க வேண்டும் என்றாவது. இது குறித்து எனக்கு சரியான guidance தரமுடிந்தவர்களை வரவேற்கத் தயார்.


***************

அடிப்படையில் சினிமாவின் மீது காதல் கொண்டு (திரைப்படங்களில் நடிக்க வேண்டுமென்ற அளவிற்கு) முடிந்தளவு உலகத் தரமான சினிமாக்களை தீவிரமாக பார்த்து, படித்து வருபவள் நான். ஆனால், சினிமாவை நல்ல முதலீடாக கருதி, பாடம் போல படித்து ஆங்கிலப் படத்தாக்கத்தால் அதி நவீன(technology)த்தைப் புகுத்தி, கதையில் மட்டும் திட்டமிட்டு கோட்டைவிடுகின்றனர் நமது நவீன சினிமா பொறுக்கிகள். வித்தியாசம் என்ற பேரில் இது போன்ற மனிதாபமற்ற செயல்களில் கண்மூடித்தனமாக, இறங்குவது, சினிமாவை விற்று சாப்பிட்டு அதன் மீதே மலம் களிப்பதற்கு இணையாகத்தான் நான் உணர்கிறேன்.

ஆவலுடன் இந்த படத்தை, எனது ஆண்ட்டி மற்றும் தோழியொருவருடன் தியேட்டரில் பார்த்த என் நிலையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். படம் முடிந்து நான் வெளியேறிய போது நாட்டு ம(மா)க்கள் என்னைப் பார்த்த பார்வைக்கு என் பதில் என்ன..? உங்கள் பதில்தான் என்ன...?


***************

வரிசையாக தனது படத்தில் விதவிதமான கிரிமினல்களைக் காட்டி வரும் கௌதமிற்கு(அனேகமாக, இவருக்கு மனதில் தான் ஒரு next மணிரத்னம்,south ராம்கோபால் வர்மா என்ற நினைப்பு இருக்கலாம்) இம்முறை மிக வித்தியாசமான கிரிமினலாக ஒரு பாலியில் வெறிபிடித்த அலி. படத்தில் இந்த காட்சியும், கமல் "நீங்க என்ன ஹோமோசெக்சுவலா..?" என்று கேட்கும் காட்சியும் தான் காமிடியாக காட்டுப்படுகிறது, ம(மா)க்களும் இவ்விரு காட்சிகளில் தான் வாய்விட்டு சிரித்தனர். (சக்ஸஸ் தானே கௌதம்..?).

வித்தியாசம் விரும்பி கௌதம் தனது அடுத்த படத்தில் மேலும் ஒரு வித்தியாசத்தை நுழைக்கலாம்.

கதாநாயகியை பத்து அடியாட்கள் கற்பழிக்கும் காட்சி....

பத்தில் ஒன்பது பேர் கதாநாயகியை கற்பழிக்க, ஒருவர் மட்டும் நாயகியை காப்பாற்ற வரும் கதாநாயகனை கற்பழிக்கலாம். இதில் கதாநாயகனாக கமலும், அவரை கற்பழிக்கும் அடியாளாக கௌதமும் (இந்த படத்தில் கூட ஒரு பாடல் காட்சியில் தொன்றுகிறார்). கதாநாயகியாக கௌதமின் மனைவியும் நடிப்பது மேலும் சிறப்பு...

பொட்டைகளை கேவலப்படுத்தும் இத்தகைய நாதாரிகளை பொதுவாக, இப்படி கேட்பது தான் எங்கள் வழக்கம். அதன்படி, "அடி செருப்பால, தேவிடியா பையா!!"

****************
http://livingsmile.blogspot.in/2006/09/are-you-bastard-director-gautham.html

No comments:

Post a Comment