Friday, October 9, 2015

FUCK OFF INDIAIN BUREAUCRACY

http://livingsmile.blogspot.in

மதியம் புதன், பிப்ரவரி 16, 2011


FUCK OFF INDIAIN BUREAUCRACY
புறக்கணிக்கப்படுவதும், அவமானப்படுவதும், வறுமையும் என் வரலாற்றின் நிரந்தர அடையாளங்கள். நாசகர இந்தியாவில் திருநங்கையாக பிறந்ததைவிட கண்ணியமாக வாழ நினைத்திடும் திருநங்கையாக பேராசை கொண்டதன் பின்விளைவு இவை. அதிலும் நாடக கலைஞராக வாழ்ந்திட ஏக்கம் கொண்டதன் உச்ச தண்டனையும்.

இதுநாள் வரை இந்திய அரசாங்கத்தால் மட்டுமே பரிசளிக்கப்பட்ட புறக்கணிப்பும் இதர புண்ணாக்குகளும் இன்று பிரான்ஸ் அரசாங்கத்தாலும் வாரி வழங்கப்பட்டது.

தோழர் ஷோபா சக்தியும், இதர இலக்கிய ஆர்வலர்களும் ஆண்டுதோறும் நடத்தும் 2011 இலக்கியக்கூட்டத்திற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். France Embassy எனது VISAவை மறுத்துவிட்டது. காரணம், நான் பிரான்ஸ் சென்றபின் திரும்பி வரவேன் என்ற உத்திரவாதம் இல்லையாம். ( சொந்த ஊர்லயே சோத்துக்கு வழியில்ல. பிரான்ஸ்க்கு போயி கவர்னர் ஆயிருவேன்னு பயப்படுறாங்க!! )

அவநம்பிக்கைக்கு அவர்கள் தரும் காரணங்கள்

1. திருமணமாகதவள்

2. குடும்பப் பிண்ணனி இல்லாதவள்.

3. நிரந்தர வருமானம் மற்றும் வேலையின்மை.

4. மிகக் குறைவான வங்கிக் கணக்கு, மற்றும் என் பெயரில் குறிப்பிடும்படி சொத்து இன்மை.

திருநங்கைகளை மனுஷியாகக்கூட பார்க்காத நாட்டில் என் திருமணம் எப்படி சாத்தியம்?

எந்த குடும்பம் திருநங்கைகளை ஏற்றுக் கொள்ளும், என்ன படித்தும், என்ன தகுதி இருந்தும் இந்த புண்ணிய பூமியில் திருநங்கைகளுக்கு வேலை என்பது பிச்சையும்/பாலியல் தொழிலும்தான் என்று France Embassy யார் எடுத்து சொல்வது. வேலையில்லாத நிலையில் சொத்துக்கு எங்கே போவது.

எத்தனை DOCUMENTS, எத்தனை RECOMMENDATION LETTERS, எத்தனை PAPER CUTTINGS, எத்தனை PHOTOS, எத்தனை அலைக்கழிப்புகள், இன்னும் எத்தனை, எத்தனை. போக்குவரத்து மற்றும் இதர செலவுகளை விழா குழுவினர் ஏற்றுக் கொள்ளும் நிலையிலும், மேற்படி காரணங்களுக்காக VISA மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு நேரடியாக திருநங்கைகளுக்கு VISA கிடையாது என்றே சொல்லியிருக்கலாம்.

நண்பர்களே அந்நிய தேசம் போகமுடியாததல்ல... இத்தேசம் மட்டுமன்றி அந்நிய தேசமும் என்னை புறக்கணிக்கும் நிலை, என்னை ஆற்றா கோபத்தில் இருக்குகிறது.

புரிதலுக்கு நன்றி!!

எப்பொழுதையும் விட இப்பொழுது, இந்த நொடியில் இத்தேசத்தை ஆனமட்டும் சபிக்க விரும்புகிறேன்.

எனது ஆற்றாமையில் பங்கேற்ற நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அதே சமயம் இரண்டு விசயங்களை நீஙகள் சரியாக புரிந்துகொள்ள விரும்புகிறேன்.

1. சிலர் என் மறுக்கப்பட்டது நான் திருநங்கை என்பது மட்டுமே காரணமல்ல என்கிறார்கள். இல்லை.

பணவரத்து என்ற ஒன்றைதவிர, நான் மீண்டும் திரும்பி வருவேன் என்பதற்கான பல சான்று கலை தந்துள்ளேன். இயக்குநர் மிஷ்கினுடன் நந்தலாலாவில் உதவி இயக்குநராக பணிபுரிந்து மற்றும் அவரது அடுத்த படம் சாமுராயிலும் பணிபுரிய இருப்பது என்பதற்கான சான்றுகளை அளித்துள்ளேன். அதேபோலவே இதுவரையிலான எனது நாடகப் பணிகள், இனியும் பங்காற்றவுள்ள நாடகப்பணிகள் அனைத்திற்குமான சான்றுகள். எழுத்தாளர், சமூகப் போராளி என்பதற்கான பல சான்றுகள், பரிசுகள், விருதுகள் என அனைத்தையும் தான் காட்டியுள்ளேன். கிட்டதட்ட 60, 70 டாகுமென்ட்ஸ் இருக்குமென நம்புகிறேன். இது போக எனது பொருட்செலவு அனைத்தையும் அமைப்பாளர்கள் ஏற்றுக்கொள்வதையும் காட்டியுள்ளென்.


பணமன்றி அவர்கள் சொல்லும் மற்ற காரணங்கள், திருமணமின்மை, குடும்பமின்மை, சொத்தின்மை..

இந்திய தேசத்தில் இம்மூன்றும் மறுக்கப்பட்டது நான் திருநங்கை என்பது தானே காரணம். இந்தியாவில் எனக்குள்ள பணிகளையும், பல்வேறு தகுதிகளும், நான் திரும்பி வரவேண்டிய தேவையை நிறுவிய போதும், மேற்படி மூன்றினை மட்டுமே அவர்கள் கூறும் போது வேறு எது காரணமென்று கூறமுடியும்.


2. நான் ப்ரான்ஸ் போகததில் எனக்கு வறுத்தமொன்றுமில்லை. அதேசமயம் , என் பாலின அடையாளம் காரணமாக நிகழும் எந்த புறக்கணிப்பையும் சகித்துக்கொள்ளும் பக்குவமின்மை மட்டுமே என்னை நிலைகொள்ளச் செய்கிறது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதும். உங்கள் பார்வைக்கு இந்த அவலத்தை முன்வைப்பது மட்டுமே என் நோக்கம்.

No comments:

Post a Comment