திருநங்கை சங்கீதா
ஏப்ரல் - 15, திருநங்கைகள் தினம்:
ரோட்டில் நாம் நடந்து செல்லும் போது கடந்து செல்லும் அரவாணிகளை கண்டால் அசூயை
அடைவது உண்டு.காரணம் அவர்களை நாம் ஒரு மனித பிறப்பாக ஏற்றுக் கொள்வதில்லை.அவர்களின்
நடை, பேச்சு, உடை செயல் என அனைத்தையும் கேலி செய்து அவர்களை காட்சிப் பொருள்
ஆக்குகின்றோம். அப்படி புறக்கணிக்கப் பட்டதின் விளைவாகத்தான் அவர்கள் பாலியல் தொழில், பிச்சை எடுப்பது என தடம் மாறி விடுகின்றனர்.
சமூகம் புறக்கணிக்கப்பட்டதின் விளைவாக தற்கொலை செய்து கொண்ட அரவாணிகள் எத்தனையோ
பேர். அப்படிப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஒரு தைரியமிக்க திருநங்கைதான் இந்த
சங்கீதா.மூன்றாவது பாலினமாக இருக்கிற இந்த அரவாணிகளின் வாழ்வில் ஒளியேற்ற கோவை
மாவட்டத்தில் பிறந்தவர் தான் இந்த சங்கீதா.
கடைகளில்
கைதட்டி பிச்சை எடுக்கும் பல்வேறு அரவாணிகளுக்கு மத்தியில் சொந்தமாய் சமையல் வேலை
செய்து இந்த சமூகத்தில் தனக்கென ஒரு மதிப்பையும் மரியாதையும் கொண்டு இருக்கிறார்.
இவர் கோவை
மாவட்ட தாய் விழுதுகள் அமைப்பின் அரவாணிகள் சங்க தலைவராக கடந்த வருடம் வரை
இருந்தார்.இப்போது உறவுகள் என்னும் அமைப்பினை
தோற்றுவித்து அரவாணிகள் மட்டுமன்றி பொதுமக்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை
செய்து வருகிறார்.திருநங்கைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை
மற்றும் ரேசன் கார்டு பெற்று தருவது, உடல்
நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் அரவாணிகளுக்கு மருத்துவ சிகிச்சை ஏற்பாடு செய்வதும், அரசின் மக்கள் நலத்திட்ட உதவிகளை
தகுதியான நபர்களிடம் கொண்டு சேர்ப்பது,
என பல்வேறு சமூக உதவிகளையும்
தன்னால் முடிந்த அளவிற்கு செய்து வருகிறார்.
எத்தனையோ அரவாணிகளுக்கு மத்தியில் இவர் ஒரு சாதனை மிக்க
பெண்மணி என்பது ஆச்சரியமே..திருநங்கைகளின் நல்வாழ்வுக்காக தன்னலம் கருதாது சேவை செய்து வரும் சங்கீதா அவர்கள்
கோவையில் மார்ச் மாதம் மகளிர் தின
விழாவில் சிறந்த சமூக சேவகி
விருதினை பெற்று இருக்கிறார்.
தற்போது
சங்கீதா கேட்டரிங் சர்வீஸ் என ஆரம்பித்து வெற்றி நடை போட்டு வருகிறார்.இவரின்
கைகளில் நள மகராஜனே குடி கொண்டுள்ளார்.இவர் செய்யும் பிரியாணியை சாப்பிட்டவர்கள் நிச்சயம் இவரை மறக்கமாட்டார்கள்..அந்த அளவுக்கு மிகுந்த சுவையுடன் செய்து
தருவார்.அசைவத்தில் இவர் அனைத்து
வகைகளும் மிக சிறப்பாய் செய்வார்.அதுபோலவே
சைவத்திலும் மிக
அற்புதமாக சமைக்கிறார்..
இவரின் கைமணம் உங்களின் வீட்டு விசேசத்தில் இடம்பெற வேண்டுமா…அல்லது இவரை பாராட்டி
வாழ்த்தணுமா…. அழையுங்கள்….
20
பேர் முதல் 2000 பேர் வரை சாப்பிடும் அளவிற்கு
திறம்பட சமையல் பணி புரிவார்.
(மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் )
(மாண்புமிகு அமைச்சர் அவர்களுடன் )
(மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் )
திருநங்கைகள்
தினமான ஏப்ரல்
15 அன்று இவர்களை வாழ்த்தி
சமூகத்தில் இவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பினை உண்டாக்குவோம் என்று நாமும் உறுதி மொழி ஏற்க
வேண்டும். சமூகத்தில் ஒதுக்கப்பட்ட இனமான
திருநங்கைகளுக்கு நம்மால் முடிந்த அளவிற்கு உதவிகளை செய்வோம்.
இவர் கிட்டத்தட்ட எனக்கு அறிமுகம் ஆகி
12 வருடங்கள் ஆகிறது.எனது எல்லா குடும்ப நிகழ்வுகளிலும் இவரின்
கைப்பக்குவம் இருக்கிறது.ஒவ்வொரு
வருடமும் பிறந்தநாள், வீட்டு
விசேசங்கள், கிடாவெட்டு என எல்லா
நிகழ்வுகளிலும் இவரே தான் சமையல் செய்து வருகிறார்.
இவரின்
தொடர்பு எண் - 98947 71132
சங்கீதா
கேட்டரிங் சர்வீஸ், சாய்பாபா
கோவில், கோவை
நேசங்களுடன்
ஜீவானந்தம்
http://www.kovaineram.in/2013/04/blog-post_8.html
No comments:
Post a Comment