ஏனையவை
திருநங்கைகள்
![]() |
உருவத்திலும் வேற்றுமை சில கண்டு
பாலுணர்வுகள் பாதைமாறி சென்றதால்
பால்கொடுத்த தாய்கூட உன்னை வெறுக்க
பரிதாபமாய் நீ வீதிக்கு வந்தது
படைத்தவன் செய்த தவறா?
நீ வீதியில் போனால்
வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம்
நீ வேலை கேட்டுப்போனால்
தரமறுக்குது மேலிடம்
தள்ளப்படுகின்றனர் வயிற்று பிழைப்புக்காக
தவறான பாதையில் உங்களில் சிலர்
சட்டசபை போன
திருநங்கையும் உண்டு
சல்லாபத்துக்கு விலையாகும்
திருநங்கையும் உண்டு
உன்தவறு ஏதுமில்லை
சாதிக்க நினைத்தால் நீ வாழலாம்.
No comments:
Post a Comment