Friday, October 9, 2015

திருநங்கை எழுதிய முதல் கவிதை தொகுப்பு பிரியாபாபு


Priya Babu  முகநூலிலிருந்து.....


"குறி அறுத்தேன்" தோழி கல்கியின் முதல் கவிதை தொகுப்பு. தமிழில் வெளிவந்துள்ள திருநங்கை எழுதிய முதல் கவிதை தொகுப்பு என்ற பெருமையை பெறுகிறது இந்த கவிதை தொகுப்பு.
கடந்த 25ம் தேதி கோவையில் நடந்த இந்த கவிதை தொகுப்பின் அறிமுக கூட்டத்தில் அக்கா கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, தோழி நறுமுகை தேவி,எங்கள் அன்பு மாமா பாமரன் , கல்கியின் அம்மா ஆகியோருடன் நானும் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டேன்.
இந்த விழாவில் கல்கியின் தாயார் ஆற்றிய உரை வந்திருந்த அனைவரையும் சிந்திக்க வைத்தது ஆம் " திருநங்கை என்றாலும் கல்கி என் குழந்தை தான் , என் குழந்தையை நான் படிக்க வைத்ததின் பலனை நான் இந்த தருணத்தில் நான் உணர்கிறேன். திருநங்கைகளின் பெற்றோர் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். அந்த குழந்தைகள் நம்மை முழுமையாக கவனிச்சிக்குவாங்க" என எதார்த்தை தன் வெள்ளந்தியான வார்த்தைகளால் அவர் ஆழமாக சொன்ன போது கரவொலியில் அரங்கமே அதிர்ந்தது.
ஒரு தாயின் இந்த வார்த்தை சமூக மாற்றத்தின் முதல் வித்து எனலாம்,இந்த நிகழ்வில் கல்கியின் சகோதரி,குழந்தைகள் , பெரியம்மா என ஒட்டு மொத்த குடும்பமே திரண்டிருந்தது நெகிழ்வான தருணமாக இருந்தது.
ஆண்டாள் பிரியதர்ஷினி அக்காவின் ஆழமான உரை, பாமரனின் அன்பான ஆலோசனைகள் , நறுமுகை தேவியின் அழுத்தமான கருத்துரை ,நேச உறவுகள் , பாசப்பினைப்புகள் என அழகாய் நீண்டன அந்த மாலைப்பொழுது....
இந்த கவிதை தொகுப்பு திருநங்கைகளின் சமூக நிலை மட்டும் பதிவு செய்த்தோடு ,பொது சமூகத்தில் இன்னும் நாம் ஆழமாய் போராட வேண்டிய மணல் கொள்ளை ,நீர் வளம் சுரண்டல், கழனிகளை கட்டிடங்களாக்கும் நிலைக்கான எதிர்ப்பு என நீளுகிறது....

No comments:

Post a Comment