Wednesday, October 14, 2015

திருநங்கை, நம்பிகளுக்கு தனி ஒதுக்கீடு வேண்டும்

திருநங்கை, நம்பிகளுக்கு தனி ஒதுக்கீடு வேண்டும்

ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கைகள், பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பிகள் தங்களின் சுய பாலின அடையாளத்துடன் அரசு பணியில் சேர இருக்கும் தடையை எதிர்த்தும், பால்மாறிகளுக்கு தனி இட ஒதுக்கீடு கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.
130808091323_transgender_640x360_bbc_nocredit
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கைகள் நான்குபேரும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி ஒருவருமாக ஐந்துபேர் இணைந்து இந்த வழக்கை தொத்திருக்கிறார்கள். அதில் தாங்கள் மத்திய மற்றும் மாநில அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போது திருநங்கை மற்றும் திருநம்பி என்கிற தங்களின் பாலின அடையாளம் ஏற்கப்படுவதில்லை என்பதால் தங்களுக்கு அரசு வேலை கிடைக்காமல் போவதாகவும் இதை மாற்றி தங்களின் பாலின அடையாளத்தின் அடிப்படையிலேயே அரசு வேலைக்கு விண்ணப்பிக்க தங்களைப் போன்றவர்களை அனுமதிக்கவேண்டும் என்றும், தங்களைப் போன்ற பால்மாறிகளுக்கு மூன்று சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றும் இவர்கள் கோரியிருக்கிறார்கள்.
இவர்களின் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து பதில் அளிக்கும்படி மத்திய மாநில அரசுகளிடம் கேட்டிருக்கிறது. 
இந்த வழக்கு தொடுத்திருப்பவர்களில் ஒருவரான லிவிங் ஸ்மைல் வித்யா என்கிற திருநங்கை, தாங்கள் ஐந்துபேரும் மத்திய, மாநில அரசுபணிகளுக்கு விண்ணப்பித்தபோது, தங்களின் பிறப்புச்சான்றிதழ் மற்றும் கல்விச்சான்றிதழ்கள் எல்லாமே தங்களை ஆண் என்றோ அல்லது பெண் என்றோ பதிந்திருக்கும் நிலையில், தங்களின் தற்போதைய திருநங்கை அல்லது திருநம்பி என்கிற அடையாளத்தை அரசு அதிகாரிகள் ஏற்க மறுப்பதாக தெரிவித்தார்.
இதனால் தங்களால் அரசு பணிக்கே விண்ணப்பிக்க முடியாமல் இருப்பதாகவும், அதையும் மீறி தாங்கள் விண்ணப்பிக்கும்போது தங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாகவும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். எனவே தங்களுக்கென தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று கூறிய லிவிங் ஸ்மைல் வித்யா, கல்வி மற்றும் சமூகத்தில் பின் தங்கியவர்களுக்கு அளிக்கப்படும் தற்போதைய இடஒதுக்கீடு கொண்டுவரப்படுவதற்கு கூறப்பட்ட அனைத்து காரணங்களும் தங்களுக்கும் பொருந்தும் என்றும் வித்யா கூறினார்.
– செய்தி ஆசிரியர்
– படங்கள் நன்றி: பிபிசி

http://www.tamilaustralian.com.au/news/2013/11/22/ransgenderreservation/

No comments:

Post a Comment