Wednesday, October 14, 2015

முதன்முறையாக திருநங்கை என பாஸ்போர்ட் பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த சர்மிளா!




மார்ச் 5, 2015
நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கை என பாஸ்போர்ட் பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த சர்மிளா!

SatyashreeSதமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட திருநங்கை சதயச்ரீ சர்மிளா, பாஸ்போர்ட் பெறும் முதல் திருநங்கை என்கிற சிறப்பைப் பெற்றிருக்கிறார். தமிழகத்தில் பிறந்து மும்பையில் வாழும் சர்மிளா, திருநங்கைகளுக்கான தொண்டு நிறுவனம் பணியாற்றிவருகிறார். 33 வயதான இவர், ஆன் லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்கள் மட்டுமே இருந்ததால், பாஸ்போர்ட் அதிகாரிகளிடம் மூன்றாம் பாலினம் இல்லை என்று புகார் செய்தார். கடந்த 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலின அங்கீகாரம் தரப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்த நிலையில், சர்மிளாவின் புகாரை ஏற்றுக்கொண்ட பாஸ்போர்ட் அதிகாரிகள், ஆன் லைன் விண்ணப்பத்தில் மூன்றாம் பாலினத்தை சேர்த்துள்ளனர். தற்போது சர்மிளாவுக்கு பாஸ்போர்ட்டும் கிடைத்திருக்கிறது. இதுகுறித்து ‘இதுதான் என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம்’ என கருத்து தெரிவித்திருக்கிறார் சர்மிளா.

இதுவரை திருநங்கைகள் பெண் என்ற பாலின அடிப்படையிலேயே பாஸ்போர்ட் பெற்று வந்தார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.


http://fourladiesforum.com/2015/03/05/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/

No comments:

Post a Comment